லாட்வியா நாட்டில் சைபர்குற்றத்தில் ஈடுபட்ட 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஒக்டோபர் 10ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட ‘SIM CARTEL’ எனும் விசேட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இதன்போது 40,000 SIM Cards, 05 Servers, 1200 SIM BOX உபகரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட குறித்த குழுவினர் ஒஸ்ட்ரியா மற்றும் Latvia வில் சுமார் 3200 சைபர் குற்றங்களில் 5 யூரோக்களுக்கு அதிக நிதிமோசடியில் ஈடுபட்டுள்ளமை வௌிக்கொணரப்பட்டுள்ளது.
இந்த 40,000 சிம் காட்களை பயன்படுத்தி 49 மில்லியன் Online Accounts ஆரம்பிக்கப்பட்டு நிதிமோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.








