Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழில் மர்மமான முறையில் இளம் யுவதி உயிரிழப்பு; தாய்மாமன் கைது

யாழில் மர்மமான முறையில் இளம் யுவதி உயிரிழப்பு; தாய்மாமன் கைது

11 months ago
in செய்திகள்

யாழில் இளம் யுவதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் அவரது தாய்மாமன் இன்றையதினம் (12) கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இருபாலை, கோப்பாய் கிழக்கு என்ற முகவரியை சேர்ந்த கிடைப் பிரதீப் நிவேதா என்ற 24 வயது யுவதியே இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

கடந்த 9ஆம் திகதி அதிகாலை 2.00 மணியளவில் குறித்த யுவதி மூச்செடுப்பதற்கு சிரமப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நோயாளர் காவு வண்டிக்கு தகவல் வழங்கிய நிலையில், நோயாளர் காவு வண்டியில் அங்கு வந்தவர்கள் யுவதி ஏற்கனவே உயிரிழந்துள்ளாதாக தெரிவித்து திரும்பி சென்றனர்.

பின்னர் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலத்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

ஆரம்பகட்ட மரண விசாரணைகளின்போது குறித்த யுவதிக்கு ஆஸ்துமா வியாதி இருப்பதாக உறவினர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

யுவதியின் சடலம் மீது உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவரின் உடல் முழுவதும் கடுமையான தாக்குதல் நடாத்தப்பட்டு, கண்டல் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

பின்னர் மீண்டும் மேற்கொள்ளப்பட்ட மரண விசாரணைகளின் போது அதிர்ச்சி மிக்க தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த யுவதி தாய் – தந்தை இல்லாத நிலையில் சகோதரியுடனேயே வசித்து வந்துள்ளார். கடந்த 08ஆம் திகதி இவர் சகோதரிக்கு சொல்லாமல் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டு பின்னர் வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் யுவதியின் தாயின் தம்பி பச்சை பனை மட்டையால் யுவதியை கடுமையாக தாக்கிய விடயம் தெரியவந்துள்ளது.

அதன்பின்னரே குறித்த யுவதிக்கு 09ஆம் திகதி அதிகாலை 2.00 மணியளவில் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட கோப்பாய் பொலிஸார் யுவதியின் தாய் மாமனான, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சுகாதார பணியாளராக கடமை புரியும் நபரை கைது செய்துள்ளனர்.

விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் வழக்குத் தீர்ப்பை கத்தோலிக்க திருச்சபை வரவேற்பு!
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் வழக்குத் தீர்ப்பை கத்தோலிக்க திருச்சபை வரவேற்பு!

September 23, 2026
ஆடை சக்கரத்தில் சிக்கி மோட்டார் சைக்கிள் விபத்து; பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு!
செய்திகள்

ஆடை சக்கரத்தில் சிக்கி மோட்டார் சைக்கிள் விபத்து; பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு!

September 23, 2026
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!
செய்திகள்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

September 23, 2026
மட்டக்களப்பு மாநகரசபை – காத்தான்குடி நகரசபை இடையே ஏற்பட்ட முறுகல் காத்தான்குடி பொலிஸாரின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது!
செய்திகள்

மட்டக்களப்பு மாநகரசபை – காத்தான்குடி நகரசபை இடையே ஏற்பட்ட முறுகல் காத்தான்குடி பொலிஸாரின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது!

September 23, 2026
பிரதமருக்கும் IMF பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையில் சந்திப்பு!
செய்திகள்

பிரதமருக்கும் IMF பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையில் சந்திப்பு!

September 23, 2026
ஈரானை முற்றிலும் அழித்துவிடுவதாக ட்ரம்ப் எச்சரிக்கை!
செய்திகள்

ஈரானை முற்றிலும் அழித்துவிடுவதாக ட்ரம்ப் எச்சரிக்கை!

September 23, 2026
Next Post
ஹென்ஸ்மன் வீதி என்ற பெயர் பலகையை அகற்றி உன்னிச்சை வீதி என்று வைக்க நடவடிக்கை

ஹென்ஸ்மன் வீதி என்ற பெயர் பலகையை அகற்றி உன்னிச்சை வீதி என்று வைக்க நடவடிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு