Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிரதமருக்கும் IMF பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையில் சந்திப்பு!

பிரதமருக்கும் IMF பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையில் சந்திப்பு!

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் எவான் பாபஜார்ஜியோ (Evan Papageorgiou) தலைமையிலான பிரதிநிதிகள் குழு, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை நேற்று (22) பாராளுமன்றத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதியமைப்பின் கீழ் இலங்கையின் பொருளாதார சீர்திருத்தத் திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் எட்டப்பட்ட முடிவுகள் தொடர்பான ஏழாவது மதிப்பாய்வு குறித்து இதன்போது சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.

சவாலான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் இலங்கை பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்து அடைந்துள்ள முன்னேற்றம் குறித்துக் குறிப்பிட்ட பிரதமர், பாரிய சவால்களுக்கு மத்தியிலும் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேண அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக வலியுறுத்தினார்.

அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் எட்டப்பட்டுள்ள முன்னேற்றம் குறித்துக் குறிப்பிட்ட பிரதமர், IMF வெளிப்படைத் தன்மையுடன் வழங்கி வரும் ஆதரவைப் பாராட்டினார்.

பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு அப்பால் சென்று நிலையான பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கு அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்குத் தொடர்ந்து ஆதரவளிக்க IMF காட்டியுள்ள விருப்பத்திற்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

அதேபோல்,  வௌிப்புற காரணிகளை திறம்பட முகாமைத்துவம் செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், அபிவிருத்தி பங்காளர்களுடன் பணியாற்றும்போது நிலையான, பொறுப்புக்கூறல் கொண்ட மற்றும் அனைவரும் உள்ளடங்கிய பொருளாதார வளர்ச்சியை அடைவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

ஊழல் எதிர்ப்புச் சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் சொத்து பிரகடனங்கள் மூலம் சமர்ப்பிக்கப்படும் தகவல்களின் தனியுரிமை மற்றும் வெளிப்படைத்தன்மைக்கு இடையே சமநிலையைப் பேணுவதன் முக்கியத்துவம் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஆடை சக்கரத்தில் சிக்கி மோட்டார் சைக்கிள் விபத்து; பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு!
செய்திகள்

ஆடை சக்கரத்தில் சிக்கி மோட்டார் சைக்கிள் விபத்து; பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு!

September 23, 2026
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!
செய்திகள்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

September 23, 2026
மட்டக்களப்பு மாநகரசபை – காத்தான்குடி நகரசபை இடையே ஏற்பட்ட முறுகல் காத்தான்குடி பொலிஸாரின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது!
செய்திகள்

மட்டக்களப்பு மாநகரசபை – காத்தான்குடி நகரசபை இடையே ஏற்பட்ட முறுகல் காத்தான்குடி பொலிஸாரின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது!

September 23, 2026
ஈரானை முற்றிலும் அழித்துவிடுவதாக ட்ரம்ப் எச்சரிக்கை!
செய்திகள்

ஈரானை முற்றிலும் அழித்துவிடுவதாக ட்ரம்ப் எச்சரிக்கை!

September 23, 2026
போதைப்பொருள் கடத்தல் சந்தேகம்; ரூ.4.75 கோடி சொத்துக்கள் முடக்கம்!
செய்திகள்

போதைப்பொருள் கடத்தல் சந்தேகம்; ரூ.4.75 கோடி சொத்துக்கள் முடக்கம்!

September 23, 2026
பொதியிடப்படாத தேங்காய் எண்ணெய் விற்பனைக்கு தடை?
செய்திகள்

பொதியிடப்படாத தேங்காய் எண்ணெய் விற்பனைக்கு தடை?

September 23, 2026
Next Post
மட்டக்களப்பு மாநகரசபை – காத்தான்குடி நகரசபை இடையே ஏற்பட்ட முறுகல் காத்தான்குடி பொலிஸாரின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது!

மட்டக்களப்பு மாநகரசபை – காத்தான்குடி நகரசபை இடையே ஏற்பட்ட முறுகல் காத்தான்குடி பொலிஸாரின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு