Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முச்சக்கர வண்டி மீது பாரிய மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு; குழந்தை உட்பட மூவர் காயம்!

முச்சக்கர வண்டி மீது பாரிய மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு; குழந்தை உட்பட மூவர் காயம்!

11 months ago
in செய்திகள்

மாவனெல்ல – ரம்புக்கன வீதியில் தலகொல்ல பகுதியில் நேற்று இரவு (23) முச்சக்கர வண்டி மீது பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு 09.20 மணியளவில் குறித்த வீதியூடாக பயணித்த முச்சக்கர வண்டியின் மீதே மரம் முறிந்து வீழ்ந்துள்ளது.

இதனால், முச்சக்கர வண்டியில் பயணித்த சிறு குழந்தை உட்பட நான்கு பயணிகள் சிக்கிக் கொண்ட நிலையில், பொலிஸாரின் உதவியுடன் உள்ளூர்வாசிகளால் மீட்கப்பட்டனர்.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மாவனெல்ல ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு 37 வயதுடைய முச்சக்கர வண்டியின் சாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இரண்டரை வயது குழந்தை, 48 வயது பெண் மற்றும் 57 வயது ஆண் உள்ளிட்ட மூவரும், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த ஏனைய நபர்கள், மாவனெல்ல, லொல்லேகொட பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவார்.

இந்த சம்பவத்தில் அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு லொறி மற்றும் அருகிலுள்ள வர்த்தக நிலையமும் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதனிடையே, மரம் முறிந்து விழுந்ததால் தலகொல்ல பகுதியினூடான போக்குரவத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், பொதுமக்கள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவிறுத்தியுள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஈபிடிபி தலைமை அலுவலகத்தில் சிஐடி சோதனை; டக்ளஸிடமும் வாக்கு மூலம் பதிவு
செய்திகள்

ஈபிடிபி தலைமை அலுவலகத்தில் சிஐடி சோதனை; டக்ளஸிடமும் வாக்கு மூலம் பதிவு

October 19, 2026
சர்வதேச திறந்த கராத்தே சுற்றுப்போட்டியில் வாழைச்சேனை மாணவர்கள் 42 பதக்கங்களை வென்று சாதனை!
செய்திகள்

சர்வதேச திறந்த கராத்தே சுற்றுப்போட்டியில் வாழைச்சேனை மாணவர்கள் 42 பதக்கங்களை வென்று சாதனை!

October 19, 2026
நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு தொடர் மின்வெட்டு; நேர அட்டவணை வெளியானது
செய்திகள்

நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு தொடர் மின்வெட்டு; நேர அட்டவணை வெளியானது

October 19, 2026
இலங்கையிலும் தென்படவுள்ள ‘ஓரியோனிட்ஸ்’ விண்கல் மழை; ஒக்டோபர் 21, 22ஆம் திகதிகளில் அவதானிக்கலாம்!
செய்திகள்

இலங்கையிலும் தென்படவுள்ள ‘ஓரியோனிட்ஸ்’ விண்கல் மழை; ஒக்டோபர் 21, 22ஆம் திகதிகளில் அவதானிக்கலாம்!

October 19, 2026
மஹிந்த ராஜபக்ஷவின் வாழ்க்கைக் கதை திரைப்படமாகிறது; படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் தீவிரம்!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷவின் வாழ்க்கைக் கதை திரைப்படமாகிறது; படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் தீவிரம்!

October 19, 2026
பிரான்ஸ் போராட்டம்: உள்துறை அமைச்சரின் இராஜினாமாவை நிராகரித்தார் மக்ரோன்
செய்திகள்

பிரான்ஸ் போராட்டம்: உள்துறை அமைச்சரின் இராஜினாமாவை நிராகரித்தார் மக்ரோன்

October 19, 2026
Next Post
இன்று முதல் பேருந்து கட்டணங்களை வங்கி அட்டை மூலம் செலுத்தும் முறை அமுல்

இன்று முதல் பேருந்து கட்டணங்களை வங்கி அட்டை மூலம் செலுத்தும் முறை அமுல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு