Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கர்ப்பிணிப் பெண்களின் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு கவலைக்கிடம்; தடுப்பு கல்வி அவசியம் என அமைச்சர் சரோஜா சாவித்ரி

கர்ப்பிணிப் பெண்களின் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு கவலைக்கிடம்; தடுப்பு கல்வி அவசியம் என அமைச்சர் சரோஜா சாவித்ரி

9 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சமீபகாலத்தில் பெண்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் சிக்கல்களை கருத்தில் கொள்ளும்போது, இது எமது குழந்தைகளையும் அபாயத்துக்கு உள்ளாக்குகிறது.

எனவே, போதைப்பொருள் தடுப்புப் பணிகள் தாய்மார்களுக்கும் பொதுவாக பெண்களுக்கும் கல்வியூட்டுவதன் மூலம் ஆரம்பிக்கப்படவேண்டும் என்று நாம் கருதுகிறோம். குறிப்பாக பதின்ம வயதிலுள்ள இளம் பெண்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.

நேற்று (23) “கர்பணி மாதா ஹரசாரா” எனப்படும் கர்ப்பிணி தாய்மார்களுக்கான மனநல மேம்பாட்டு நிகழ்ச்சி கெஸ்பேவ நகரசபை அரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோது மேற்கண்டவாறு தெரிவித்த சரோஜா சாவித்ரி போல்ராஜ், அரசியல்வாதிகளுக்காக அல்லாமல், இந்த நாட்டின் குடிமக்களுக்காக முடிவுகளை எடுக்கும் ஒரு சமூகத்தை நாம் உருவாக்கி வருகின்றோம் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிகழ்வில் மகப்பேற்றுக்கு அத்தியாவசியமான பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்த முயற்சி நகரசபையின் நிதியுதவியுடன், அதன் தலைவர் சாமர மதும்ம கலுகேவின் கருத்தாக்கத்தின்படி முன்னெடுக்கப்பட்டது. இதன் மூலம் 80 தாய்மார்கள் பயனடைந்தனர்.

இந்நிகழ்வானது, பாதுகாப்பான பிரசவத்தினை வேண்டி மகாசங்கத்தின் ஆசீர்வாதங்களுடன் ஆரம்பிக்கப்பட்டது.

அதன் பின்னர், கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் மகளிர்நல மருத்துவ நிபுணர் டாக்டர் சாமிந்த ஹுனுகும்புறவால் கர்ப்பம் மற்றும் கர்ப்ப கால பராமரிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்வொன்று நடாத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ், பாராளுமன்ற உறுப்பினர் லஷ்மன் நிப்புண ஆரச்சி, கெஸ்பேவ நகரசபை தலைவர் சாமர மதும்ம கலுகே, துணைத் தலைவர் வழக்கறிஞர் மனோத்யா கல்பயாகே, மேல் மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எல்.ஏ. கலுகப்புவாரச்சி ஆகியோர் உட்பட முக்கிய அதிகாரிகள், சுகாதார நிபுணர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு; புதிய விலைகள் அறிவிப்பு!
செய்திகள்

லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு; புதிய விலைகள் அறிவிப்பு!

September 5, 2026
இலங்கையில் மனித உரிமைகள் நிலை; பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்ய ஐ.நா. வலியுறுத்தல்!
செய்திகள்

இலங்கையில் மனித உரிமைகள் நிலை; பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்ய ஐ.நா. வலியுறுத்தல்!

September 5, 2026
குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்
செய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்

September 4, 2026
மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி
செய்திகள்

மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி

September 4, 2026
நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை
செய்திகள்

நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை

September 4, 2026
அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!
செய்திகள்

அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!

September 4, 2026
Next Post
தொடரும் சீரற்ற காலநிலை – உயிரிழப்பு 10 ஆக உயர்வு

தொடரும் சீரற்ற காலநிலை - உயிரிழப்பு 10 ஆக உயர்வு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.