Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வந்தாறுமூலையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் மருத்துவப் பீட மாணவர் உயிரிழப்பு

வந்தாறுமூலையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் மருத்துவப் பீட மாணவர் உயிரிழப்பு

10 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு – வந்தாறுமூலைப் பிரதேசத்தில் நேற்று (24) திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

ஒரு குழந்தையின் தந்தையான 23 வயதுடைய எம்.மசூத் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் மீராவோடை பிரதேசத்தைப் பிறப்பிடமாகவும் ஓட்டமாவடி பிரதேசத்தை வசிப்பிடமாகவும் கொண்டவராவார்.

மேற்படி மாணவன் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு – பிள்ளையாரடி பிரதேசத்திலுள்ள மருத்துவபீடத்தில் இருந்து ஓட்டமாவடிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது எதிரே வந்த உழவு இயந்திரம் திடீரென வலது புறத்து உள்வீதிக்கு மாறிய வேளை அதனுடன் மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.

இதன்போது உழவு இயந்திரத்திற்கும் இழுவைப் பெட்டிக்கும் இடையில் மோட்டார் சைக்கிள் சிக்கியுள்ளது.

மேற்படி மாணவன் அணிந்திருந்த தலைக்கவசம் சுக்குநூறாகியதையடுத்து தலையில் பாரிய காயம் ஏற்பட்டு இரத்தப் பெருக்கினால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.உழவு இயந்திரத்தின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உழவு இயந்திரம் மற்றும் மோட்டார் சைக்கிளும் பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நசீர் சம்பவ இடத்தைப் பார்வையிட்ட பின்னர் விசாரணையை மேற்கொண்டார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்
செய்திகள்

கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்

September 9, 2026
வவுனியா மாநகர முதல்வர் பதவி நீக்கம் இடைக்காலத் தடையுத்தரவு 23ஆம் திகதி வரை நீடிப்பு!
செய்திகள்

வவுனியா மாநகர முதல்வர் பதவி நீக்கம் இடைக்காலத் தடையுத்தரவு 23ஆம் திகதி வரை நீடிப்பு!

September 9, 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5.37 கோடி ரூபாய் மதிப்பிலான ‘குஷ்’ போதைப்பொருளுடன் இரு பெண்கள் கைது!
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5.37 கோடி ரூபாய் மதிப்பிலான ‘குஷ்’ போதைப்பொருளுடன் இரு பெண்கள் கைது!

September 9, 2026
போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் காட்டுயானையால் பாரிய சேதம்!
காணொளிகள்

போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் காட்டுயானையால் பாரிய சேதம்!

September 9, 2026
நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடியைப் பறிகொடுத்துக் கண்ணீரில் கதறிய பெண்!
செய்திகள்

நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடியைப் பறிகொடுத்துக் கண்ணீரில் கதறிய பெண்!

September 9, 2026
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் புதிய CEO-வாக விபுல் மிஸ்ரா நியமனம்!
செய்திகள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் புதிய CEO-வாக விபுல் மிஸ்ரா நியமனம்!

September 9, 2026
Next Post
யாழில் மரணச்சடங்கின் இறுதி ஊர்வலத்தின் போது பட்டாசு வெடிப்பதற்கு தடை

யாழில் மரணச்சடங்கின் இறுதி ஊர்வலத்தின் போது பட்டாசு வெடிப்பதற்கு தடை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு