கொழும்பு, றோயல் கல்லூரியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரெஹான் பீரிஸ் தலைமையிலான இலங்கை 17 வயதுக்கு உட்பட்ட அணி இரு மூன்று நாள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் ஆடுவதற்காக நேற்று (24) பங்களாதேஷ் புறப்பட்டுச் சென்றது.
இலங்கை இளையோர் அணி ஆரம்பத்தில் பங்களாதேஷுக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட மூன்று நாள் தொடரில் ஆடவுள்ளது.
இதன் முதல் போட்டி நவம்பர் 27 ஆம் திகதி மிர்பூரின் ஆரம்பமாகும். தொடர்ந்து பசுன்ந்ராவில் நடைபெறும் இரண்டாவது ஆட்டம் டிசம்பர் 2 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இரு அணிகளும் மோதும் 3 ஒருநாள் போட்டிகளும் டிசம்பர் 7, 9 மற்றும் 12 ஆம் திகதிகளில் சிட்டொக்ராமில் நடைபெறும்.








