Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு காரணமான சூத்திரதாரிகள் குறித்து நாளை உண்மையை வெளியிடபோவதாக அறிவித்த சர்வதேச ஊடகம்; பின்னணியில் பிள்ளையனுக்கும் தொடர்பா?

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு காரணமான சூத்திரதாரிகள் குறித்து நாளை உண்மையை வெளியிடபோவதாக அறிவித்த சர்வதேச ஊடகம்; பின்னணியில் பிள்ளையனுக்கும் தொடர்பா?

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

UK Channel-4 News, ‘Sri Lanka’s East Bombings – Dispatches’ என்ற தலைப்பில் நாளை (5) ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சியில் 2019 ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் பற்றிய அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிடுவதாக செனல்-4 என்ற சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளதுடன், ராஜபக்ஸ குடும்பத்திற்கு நெருக்கமானவர்களே இத் தாக்குதலுக்கு ‘உடந்தையாக இருந்துள்ளனர் என்றும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.

“2019 ஆம் ஆண்டு இலங்கையின் கொடிய ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் பற்றிய அதிர்ச்சியூட்டும் புதிய வெளிப்பாடுகள், அரசாங்கத்தில் உள்ள அதிகாரிகளின் உடந்தையாக இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் பற்றிய அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிடப்போவதாக செனல்-4 அறிவித்துள்ள நிலையில், கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர் பிள்ளையானிள் முன்னாள் பேச்சாளரே இதில் முக்கிய பாத்திரம் வகிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

“இலங்கையின் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகள் ” என்ற தலைப்பில் நாளை (05.09.2023) ஒளிபரப்பப்படவுள்ள இந்த நிகழ்ச்சியில், ‘அரசாங்கத்திற்குள் உள்ள அதிகாரிகளே, தாக்குதல்களுக்கு உடந்தையாக இருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தற்போது புகலிடம் கோரி சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் வசிக்கும் பிள்ளையானின் முன்னாள் பேச்சாளர் ஆசாத் மௌலானவே இந்த காணொளியின் முதன்மையான ஆதாரமாக இருப்பதாக தகவலறிந்த தரப்புகள் தெரிவித்தன.

இந்த காணொளியை ஓகஸ்ட் 15 ஆம் திகதி ஒளிபரப்ப ​சனல் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் செனல்-4 க்கு, இலங்கையின் அரச புலனாய்வு சேவையின் (SIS) தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலி தனது சட்டத்தரணிகள் மூலம் வழங்கிய தெளிவுபடுத்தலைத் தொடர்ந்து, அன்றைய தினம் காணொளி ஒளிபரப்பை நிறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவங்கள் தொடர்பில், அசாத் மௌலானா, தனது பெயரைப் பயன்படுத்தியுள்ள காலத்தில், தாம் இலங்கையில் கடமையாற்றவில்லை என்பதை,மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலி, உறுதிப்படுத்தும் ஆவணங்களுடன் செனல்-4 க்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலியின் பதிலைத் தொடர்ந்து, செனல்-4 காணொளியின் தலைப்பை மாற்றி நாளைய தினம் அதனை ஒளிபரப்பத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே செனல் 4 இலங்கையின் கொலைக்களம் என்ற தலைப்பில் ஓர் ஆவணப்பட காணொளியை ஒளிபரப்பியது. இது இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் இறுதி வாரங்கள் பற்றிய அதிர்ச்சியூட்டும் காணொளியாக வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் பிரித்தானிய நேரப்படி இரவு 11.05 அளவிலும் இலங்கை நேரப்படி அதிகாலை 3.30 அளவிலும் இந்த தகவல் வெளியாகும் என சர்வதேச ஊடகங்களில் வெளியான தகவல்கள் குறிப்பிடுகின்றன.

தொடர்புடையசெய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு
செய்திகள்

யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு

September 7, 2026
அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!
செய்திகள்

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!

September 7, 2026
கோயில்கள், பள்ளிவாசல்களுக்கு அருகில் மாட்டிறைச்சி கழிவுகள் வீசப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்; செ. நிலாந்தன்
செய்திகள்

கோயில்கள், பள்ளிவாசல்களுக்கு அருகில் மாட்டிறைச்சி கழிவுகள் வீசப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்; செ. நிலாந்தன்

September 7, 2026
Next Post
ஹோட்டல் அறையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

ஹோட்டல் அறையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.