அதிதீவிர வானிலை காரணமாக வெள்ளத்தில் போக்குவரத்துக்கு மூடப்பட்டிருந்த மட்டக்களப்பு–பொலன்னறுவை பிரதான வீதி இன்று அதிகாரப்பூர்வமாக மீண்டும் பொதுமக்கள் போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளது.
மணம்பிட்டியைச் சுற்றிய பகுதிகளில் நீர்மட்டம் அதிகரித்ததால், சாலையின் பல பகுதிகள் ஆழமான வெள்ளத்தில் மூழ்கி, வாகனங்கள் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. இந்தநிலையில் தற்போது நீர் வடிந்துள்ளதன் காரணமாக மீண்டும் அந்தவழி போக்குவரத்துகள் திறக்கப்பட்டுள்ளன.








