மாண்புமிகு மலையக மக்களின் 200 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு இருப்பை உறுதிப்படுத்துவோம்,தோழமையை வலுப்படுத்துவோம் என்ற தொனிப்பொருளில் மட்டக்களப்பு பல்சமய ஒன்றியமும் இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றமும் இணைந்து மாபெரும் உறவு பகிர்வு நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
இன்று மட்டு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இது குறித்து அறிவிக்கப்பட்டது.
எதிர்வரும் 15.16.17 ஆம் திகதிகளில் மட்டக்களப்பு புனித யோன் தேவாலய மண்டபத்தில் (அமெரிக்க மிஷன்) இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மூன்று நாள் நடைபெறும் நிகழ்வில் மலையக மக்களின் 200 வருட வாழ்வியல் அணுகுமுறை தொடர்பான கண்காட்சியும் மக்கள் பார்வைக்கு வைக்கப்படவுள்ளது.
இந்நிகழ்விற்கு பொதுமக்கள் மற்றும் இலங்கை சமூக ஆர்வலர்கள் என்போரை அழைத்திருந்ததுடன் இந்த ஊடகசந்திப்பில் சிவ. ஸ்ரீ .சிவபாலன் குருக்கள் (மட்டக்களப்பு பல்சமய ஒன்றியத்தின் தலைவர்),அருட்பணி சுஜிதர் சிவநாயகம் (இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்தின் பொது செயலாளர்),கந்தையா ஜெகதாஸ் (மட்டக்களப்பு பல்சமய ஒன்றிய செயலாளர்) , மொகமது கனீபா மொகமட் இஃக்பால் (மட்டக்களப்பு பல்சமய ஒன்றியத்தின் பொருளாளர்) என்போர் கலந்து கொண்டிருந்தனர்.