Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தொண்டமானை போன்ற அடுத்த கூட்டம் இது;தமிழ் தேசிய கூட்டமைப்பின் பருப்பு இனி வேகாது-ஈரோஸ் பிரபா

தொண்டமானை போன்ற அடுத்த கூட்டம் இது;தமிழ் தேசிய கூட்டமைப்பின் பருப்பு இனி வேகாது-ஈரோஸ் பிரபா

6 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

விடுதலைப் புலிகளின் தலைவர் தமிழ் மக்களை பாதுகாக்க ஒரு அரசியல் சக்தி உருவாக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கினார். அவரால் உருவாக்கப்பட்ட கட்சி என்றதால் வாக்களிக்க வேண்டும் என்று மக்கள் வாக்களித்தனர். எனவே இனி அந்த பருப்பு வேகாது? புலம் பெயர்ந்த மக்கள் அனுப்பிய பல கோடி ரூபா பணம் மக்களிடம் சென்று சேரவில்லை எனவே இனி யாரும் தப்ப முடியாது என ஈரோஸ் கட்சியின் தலைவர் இரா. பிரபாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வெய் ஒப் மீடியா ஊடக கற்கை நிலையத்தில் நேற்று சனிக்கிழமை (06) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மலையக மக்களின் பணத்தை எவ்வாறு அந்த அரசியல்வாதிகள் சூறையாடினார்கள். அதே மாதிரி வட கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட விதவைகள், அங்கவீனர்கள், சிறுவர்கள், முதியவர்கள் உட்பட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கா க வடகிழக்கை புனரமைப்பதற்காக யுத்தம் முடிவுற்ற தன்; பின்னர் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் சுமந்திரன் சாணக்கியன் வரைக்கு எவ்வளவு பணம் அனுப்பப்பட்டது அது மக்களுக்கு சேரவில்லை.

தொண்டமானை போல அடுத்த கூட்டம் இது. சுவிஸ், லண்டன், கனடாவில் யாருக்கு எத்தனை கோடி பணம் கொடுத்தது என்ற ஆதாரம் இருக்கிறது. எனவே இனி யாரும் தப்ப முடியாது. உங்களுக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழு மற்றும் நீதிமன்றம் செல்வோம். உங்கள் வண்டவாளம் வெளிவரும்.

ஐந்து பேர் தமிழ் தேசிய கூட்டமைப்பு என இருந்து கொண்டு இன்று பிரிந்தவுடன் தப்பித்தோம் என்று நினைக்க வேண்டாம். அதேமாதிரி செந்தில் தொண்டமான் கிழக்கு ஆளுநராக இருந்த போது மாகாணத்தில் உள்ள எல்லா பிரதேச சபைகளில் இருந்த அப்பாவி மக்கள் வரிப்பணத்தை எடுத்து சமாதான புறா விட்டதும் காளை மாடுகளை இறக்கி நிகழ்வு செய்ததுதான் அவரின் வேலை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாங்கேணி, கதிரவெளி, காயங்கேணி வாகரையில் உள்ள அரச காணிகளை கம்பனிகளுக்கு கொடுத்து அதற்கு பல இலச்சம் தரகு பணம் வாங்கி கொண்டது மட்டுமல்ல இல்மனைட் அகழ்விற்கு கம்பனிகளை கொண்டுவந்து அதற்கு தரகு பணமாக பல கோடி ரூபா பணத்தை வாங்கி கொண்டதுடன் அரசாங்க பணத்தில் ஒரு வருடத்தில் 3 இலச்சம் ரூபாவுக்கு 500 கிலோ வாங்கி சாப்பிட்டுள்ள அவர் கோடி கணக்கில் சுருட்டிக் கொண்டு சென்று தப்பித்தேன் என்று நினைக்க வேண்டாம்.

விடுதலைப் புலிகளின் தலைவர் இந்த மண்ணுக்காக மக்களுக்காக தனது குடும்பத்தையே தாரை வார்த்துக்கொடுத்த ஒரு தீர்க்கதரிசனம் கொண்ட தியாகி அவர். ஆயுத போராட்டம் மெனளிக்கப் போகிறது எனவே தமிழ் மக்களை பாதுகாக்க ஒரு அரசியல் சக்தி உருவாக்க வேண்டும் என ஒட்டுக்குழுக்கள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து சம்பந்தன் தலைமையில் தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கி 22 பேரை நாடாளுமன்றம் அனுப்பினார்.

யுத்தம் முடிவுற்ற பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு 11 நாடாளுமன்ற உறுப்பினர்களாக குறைந்தது. எனவே புலிகள் இல்லை என்றால் உங்களுக்கு வாக்கு இல்லை அந்த தலைவரால் உருவாக்கப்பட்ட கட்சி என்றதால் வாக்களிக்க வேண்டும் என்று மக்கள் வாக்களித்தனர் எனவே இனி அந்த பருப்பு வேகாது.

ஈரோஸ் கட்சியை மக்கள் நம்புகின்றனர் நான் தலைவர் அல்ல தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு நல்ல தலைமைத்துவத்தை உருவாக்க ஈரோஸ் ஒரு பாலமாக ஏணிப்படியாக செயல்படும் என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

பெற்றோரின் சொத்துக்களை பெற்றுக்கொண்டு அவர்களை கைவிடும் பிள்ளைகளின் சொத்துக்கள் அரசுடமையாக்கும் சட்டம்
செய்திகள்

பெற்றோரின் சொத்துக்களை பெற்றுக்கொண்டு அவர்களை கைவிடும் பிள்ளைகளின் சொத்துக்கள் அரசுடமையாக்கும் சட்டம்

June 7, 2026
யாழ் விமான நிலையத்தில் நடராஜர் சிலை வைக்க தடையாக இருக்கும் அமைச்சர் சந்திரசேகர்
செய்திகள்

யாழ் விமான நிலையத்தில் நடராஜர் சிலை வைக்க தடையாக இருக்கும் அமைச்சர் சந்திரசேகர்

June 7, 2026
வீட்டு தகராறில் மனைவியின் தாக்குதலில் கணவன் பலி
செய்திகள்

வீட்டு தகராறில் மனைவியின் தாக்குதலில் கணவன் பலி

June 7, 2026
மட்டக்களப்பின் அபிவிருத்தி தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கையினை மத்திய வங்கியின் ஆளுநரிடம் கையளித்த மட்டக்களப்பு வர்த்தக சம்மேளன பிரதிநிதிகள்
செய்திகள்

மட்டக்களப்பின் அபிவிருத்தி தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கையினை மத்திய வங்கியின் ஆளுநரிடம் கையளித்த மட்டக்களப்பு வர்த்தக சம்மேளன பிரதிநிதிகள்

June 7, 2026
கல்முனையில் கொடூரம்; 16 வயது சிறுமி காதலனால் கடத்தப்பட்டு கூட்டு வன்புணர்வு
செய்திகள்

கல்முனையில் கொடூரம்; 16 வயது சிறுமி காதலனால் கடத்தப்பட்டு கூட்டு வன்புணர்வு

June 7, 2026
பொதுமக்கள் தினத்தில் கூட்டங்களில் கலந்துகொள்ள முடியாது; பிரதேச செயலாளர்கள் சங்கம்
செய்திகள்

பொதுமக்கள் தினத்தில் கூட்டங்களில் கலந்துகொள்ள முடியாது; பிரதேச செயலாளர்கள் சங்கம்

June 7, 2026
Next Post
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெண்படல நோய் பரவல் அதிகரிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெண்படல நோய் பரவல் அதிகரிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.