Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வெல்லாவெளியில் தொல்பொருள் பலகை வைக்கவிடாத விவகாரம்; இறந்தவர் உட்பட 56 பேருக்கு அழைப்பாணை

வெல்லாவெளியில் தொல்பொருள் பலகை வைக்கவிடாத விவகாரம்; இறந்தவர் உட்பட 56 பேருக்கு அழைப்பாணை

7 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 35ஆம் கிராமம் பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தினால் வழிகாட்டல் பதாகை நடுவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையினை தடுத்து கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் 56பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான அழைப்பாணை வெல்லாவெளி பொலிஸ் ஊடாக 35ஆம் கிராம பகுதியில் உள்ள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 25ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 35ஆம்கிராமம் கண்ணன்புரம் பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தினால் பெயர்ப்பலகையிடுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டபோது அதற்கு எதிராக பிரதேச மக்களினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

பொலிஸாரின் உதவியுடன் இந்த பெயர்ப்பலகை நடும் பணிகள் முன்னெடுக்கப்படவிருந்த நிலையில் பொதுமக்களின் கடுமையான எதிர்ப்பு காரணமாககுறித்த பணியை இடைநிறுத்தியதுடன் அங்கிருந்தவர்களின் விபரங்களை பொலிஸார் சேகரித்துச்சென்றிருந்தனர்.

இந்த நிலையில் வெல்லாவெளி பொலிஸார் ஊடாக நீதிமன்றில் தொல்பொருள் திணைக்களத்தினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு எதிர்வரும் 11ஆம் திகதி களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில் 35ஆம் கிராமத்தில் உள்ள 56பேருக்கு அழைப்பாணை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதில் ஒருவர் அண்மையில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் உயிரிழந்திருந்த நிலையில் அவருக்கும் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

அத்துடன் ஒரு குடும்பத்தில் பலருக்கு இவ்வாறு அழைப்பானை அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

உலகக் கிண்ண வெற்றி கொண்டாட்டத்தில் சோகம்; 13 வயது சிறுவன் உயிரிழப்பு!
செய்திகள்

உலகக் கிண்ண வெற்றி கொண்டாட்டத்தில் சோகம்; 13 வயது சிறுவன் உயிரிழப்பு!

July 21, 2026
அரச ஊழியர்களுக்கான ஓய்வூதியம் தொடர்பில் வெளியான தகவல்!
செய்திகள்

அரச ஊழியர்களுக்கான ஓய்வூதியம் தொடர்பில் வெளியான தகவல்!

July 21, 2026
டெங்கு தீவிரம் – 56 மரணங்கள்; நோயாளர்கள் எண்ணிக்கை 77 ஆயிரத்தை கடந்தது!
செய்திகள்

டெங்கு தீவிரம் – 56 மரணங்கள்; நோயாளர்கள் எண்ணிக்கை 77 ஆயிரத்தை கடந்தது!

July 21, 2026
இலங்கை வந்தடைந்தத பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி!
செய்திகள்

இலங்கை வந்தடைந்தத பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி!

July 21, 2026
ஹோமாகம தொழிற்சாலையில் தீ விபத்து!
செய்திகள்

ஹோமாகம தொழிற்சாலையில் தீ விபத்து!

July 21, 2026
கடற்படை நடவடிக்கையில் 1,000 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் மீட்பு!
செய்திகள்

கடற்படை நடவடிக்கையில் 1,000 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் மீட்பு!

July 21, 2026
Next Post
செவ்வந்தியின் குழந்தைக்கு நான் அப்பா இல்லை; டி.என்.ஏ பரிசோதனையும் செய்யமுடியாது-இலங்கை கிரிக்கெட் வீரர்

செவ்வந்தியின் குழந்தைக்கு நான் அப்பா இல்லை; டி.என்.ஏ பரிசோதனையும் செய்யமுடியாது-இலங்கை கிரிக்கெட் வீரர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு