யாழ். மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை மற்றும் வன்முறைச் சம்பவங்களுக்கு முடிவு கட்டுவோம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். செங்குந்தா இந்து கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வினை அடுத்து உரையாற்றிய போதே கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு கூறியுள்ளார். ஆயுதப்போராட்டத்தின் மூலம் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என தொடங்கி தற்போது ஜனநாயக வழியில் அரசியல் தீர்வு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான நிலையில் யாழ் மாவட்டத்தில் போதைப்பொருள் மற்றும் வன்முறைச் சம்பவங்களுக்கு முடிவுகட்ட பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம் என்றும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. வாலை அம்மன் சனசமூக நிலையத்தின் அனுசரணையுடன் நொதேண் விளையாட்டு கழகம் நடாத்தியமரபியல் பொங்கல் விழா, செங்குந்தா இந்து கல்லூரி மைதானத்தில் (18) நடைபெற்றது.
இந் நிகழ்வில் விருந்தினர்களாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் K.P. மஹிந்த குணரத்ன, 512 ஆவது பிரிகேட் கட்டளை தளபதி பிரிகேடியார் L.G.J.N. ஆரியதிலக, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இ. இளங்கோவன், வடமாகாண கல்வி பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் மற்றும், பிரதேச செயலர்கள், அரசு அதிகாரிகள் என பலரும் கலந் து கொண்டனர். வாலை அம்மன் சனசமூக நிலையத்திலிருந்து விருந்தினர்கள் மரபியல் பண்பாட்டோடு அழைத்து வரப்பட்டு பொங்கல் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது உரையாற்றிய கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஆயுதப் போராட்டத்தின் மூலம் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என தொடங்கி தற்போது ஜனநாயக வழியில் தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான நிலையில் யாழ் மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை மற்றும் வன்முறைச் சம்பவங்கள் முடிவுகட்டப்பட வேண்டும். அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவை என்றார்.