Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நிந்தவூரில் ஆபாச படம் காண்பித்து சிறுமியை பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுத்திய தந்தை உட்பட 5 பேருக்கு விளக்கமறியல்

நிந்தவூரில் ஆபாச படம் காண்பித்து சிறுமியை பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுத்திய தந்தை உட்பட 5 பேருக்கு விளக்கமறியல்

9 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஆபாச படம் காண்பித்து தனது சொந்த மகளை வன்புணர்வு செய்த தந்தை உட்பட ஏனைய 5 சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளதுடன் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய 3 சந்தேக நபர்களையும் பொலிஸார் கைது செய்ய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த சம்பவத்துடனான வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை (12) சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் ஜே.பீ ஏ.ரஞ்சித்குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது தந்தை உட்பட 5 சந்தேக நபர்களையும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 26 ஆந் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார். அத்துடன் அன்றைய தினம் சந்தேக நபர்களான தந்தை தாய் தவிர ஏனைய 4 சந்தேக நபர்களையும் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளை பணித்துள்ளார். இதே வேளை குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 12 வயதான சிறுமி கல்முனையில் உள்ள வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் குறிப்பிட்டார்.

நடந்தது என்ன?

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சுமார் 5 மாத காலமாக திரைமறைவில் விபச்சார நடவடிக்கை ஒன்று இடம்பெற்று வந்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் 1929 தொலைபேசி ஊடாக அப்பகுதியில் இருந்த சிறுவர் பெண்கள் தொடர்பான அமைப்பு ஒன்று வழங்கிய தகவலின் படி துரிதமாக செயற்பட்ட தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை நிந்தவூர் பொலிஸார் மற்றும் அம்பாறை மாவட்ட சிறுவர் பெண்கள் பொலிஸ் பிரிவு அதிகாரிகளிடம் சம்பவம் குறித்து அறிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியை நிந்தவூர் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்த அம்பாறை மாவட்ட சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகளிடம் நடந்த அனைத்தையும் குறித்த சிறுமி கூறியுள்ளார்.

இதன் போது பொருளாதார சிரமம் காரணமாக 12 வயது மதிக்கத்தக்க தனது மகளை முதலில் ஆபாச படம் பார்த்து வன்புணர்வு செய்த தந்தை பின்னர் சம காலத்தில் ஏழு பேருக்கு விபச்சார செயலுக்காக மகளை ஈடுபடுத்தியுள்ளமை மற்றும் இந்த செயலுக்கு சிறுமியின் தாயார் உடந்தையாக இருந்து வந்தமையும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்நிலையில் தந்தை உட்பட 5 பேரை தற்போது கைது செய்துள்ள பொலிஸார் தலைமறைவாகிய ஏனைய 3 சந்தேக நபர்களை தேடி வருகின்றனர்.

இச்சம்பவத்தில் அச்சிறுமியிடம் இருந்து பெறப்பட்ட தகவலின்படி முதலில் தந்தை கைது செய்யப்பட்டார். பின்னர் சாய்ந்தமருது, சம்மாந்துறைப் பகுதியில் அச்சிறுமியை பணத்திற்கு வாங்கி வன்புணர்ந்த 04 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 52, 41,24,40 வயதிற்குட்பட்ட பலதார திருமணம் செய்த சந்தேக நபர்களாவர்.

மேலும் தந்தை சுமார் 05 மாத காலமாக தனது மகளை பல்வேறு நபர்களுக்கு விற்று வந்ததாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தவிர இச்சம்பவத்தில் தலைமறைவான ஏனைய மூன்று சந்தேக நபர்களையும் கைது செய்ய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் பணிப்பரைக்கமைய அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் உத்தரவிற்கமைய அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சியின் வழிநடத்தலில், அக்கரைப்பற்று பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் டி.என்.பி தந்த நாணயக்காரவின் மேற்பார்வையின் கீழ் நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ.டபிள்யு.எஸ். நிஷாந்த வெடகே நெறிப்படுத்தலில் பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரியும் உப பொலிஸ் பரிசோதகருமையான கே.எல்.எம் முஸ்தபா தலைமையிலான பொலிஸ் குழு மற்றும் அம்பாறை மாவட்ட சிறுவர் மற்றும் மகளிர் பணியக பிரதம பொறுப்பதிகாரி தயானி கமகே உள்ளிட்ட அதிகாரிகள் இணைந்து குறித்த கைது நடவடிக்கை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடதக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகள் விற்பனை; ஒருவர் கைது
செய்திகள்

மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகள் விற்பனை; ஒருவர் கைது

September 20, 2026
‘சில வரிகள் நீக்கப்படும்’; ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு!
செய்திகள்

‘சில வரிகள் நீக்கப்படும்’; ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு!

September 20, 2026
அமேசன் காடுகளின் நடுவே பழங்குடியினர் கிராமம்; வைரலாகும் வீடியோ!
காணொளிகள்

அமேசன் காடுகளின் நடுவே பழங்குடியினர் கிராமம்; வைரலாகும் வீடியோ!

September 20, 2026
அனோஜனுக்கு ஆதரவாக ஹட்டனில் கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம்!
செய்திகள்

அனோஜனுக்கு ஆதரவாக ஹட்டனில் கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம்!

September 20, 2026
48 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது!
செய்திகள்

48 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது!

September 20, 2026
பல பிரதான ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
செய்திகள்

பல பிரதான ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

September 20, 2026
Next Post
அதிவேக நெடுஞ்சாலையில் பற்றியெரிந்த கார்

அதிவேக நெடுஞ்சாலையில் பற்றியெரிந்த கார்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.