நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, செப்டம்பர் 18-22 வரை திட்டமிடப்பட்டுள்ள நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடரில் இந்தியாவின் அதிகாரப்பூர்வ பெயரை ‘பாரத்’ என மாற்றுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்ற வாய்ப்புள்ளது என்று டைம்ஸ் நவ் செவ்வாயன்று தெரிவித்துள்ளது.
இதேவேளையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், இந்திய ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ ஜி20 லிருந்து அழைப்பிதழ்கள் வழக்கமான ‘இந்திய ஜனாதிபதி’ என்பதற்கு பதிலாக ‘பிரசிடெண்ட் ஆஃப் பாரத்’ என்ற பெயரில் அனுப்பப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார்.
ஜெய்ராம் ரமேஷ்-ன் டிவிட்டர் பதிவை தொடர்ந்து ஒட்டுமொத்த மக்களும் அதிர்ச்சி அடைந்த வேளையில் இதை உறுதி செய்யும் வகையில் அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவும் டிவிட்டர் தளத்தில் “பாரத் குடியரசு – REPUBLIC OF BHARAT நமது நாகரிகம் அமிர்த்கால்-ஐ நோக்கி வலிமையாக முன்னேறி வருவதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன் என பதிவிட்டு உள்ளார்.
இதுவே முதல் முறையாக ராஷ்டிரபதி பவன் அதிகாரப்பூர்வ அழைப்பிதழில் பாரதத்தின் ஜனாதிபதி என்பதை குறிப்பிட்டு உள்ளது. இதற்கு முன்பு இந்திய குடியரசுத் தலைவர் என பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்திய சட்டமைப்பில் ஆர்டிகள் 1-ல் இந்தியா அதாவது பாரதம், மாநிலங்களின் கூட்டமைப்பு என கூறப்பட்டு உள்ளது
அதிகாரப்பூர்வ ஜி20 உச்சிமாநாட்டின் அழைப்பிதழ்களில் ‘பிரசிடென்ட் ஆஃப் இந்தியா’ என்பதை ‘பிரசிடென்ட் ஆஃப் பாரத்’ என்று மாற்றிய பாஜக அரசின் சமீபத்திய நடவடிக்கை மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்து, பொது விவாதத்தை தூண்டியது.
பிஜேபி எப்படி ‘இந்தியா’ என்ற பெயரை நீக்க முடியும்? நாடு ஒரு அரசியல் கட்சிக்கு சொந்தமானது அல்ல; இது 135 கோடி இந்தியர்களுக்கு சொந்தமானது. இந்தியா என்பது நமது தேசிய அடையாளம் விருப்பத்தின் பேரில் மாற்றியமைக்க பிஜேபி-யின் தனிப்பட்ட சொத்து அல்ல.
மோடியும் மற்றும் அதன் கூட்டணிகள் INDIA கூட்டணியை பார்த்து மிகவும் பயப்படுகிறார்கள், பதட்டப்படுகிறார்கள், அவர்கள் நாட்டின் பெயரை இந்தியாவிலிருந்து பாரத் என்று மாற்ற விரும்புகிறார்கள். “ஜி20 விருந்துக்கு ராஷ்டிரபதி பவனின் அழைப்பில், “இந்திய ஜனாதிபதி” என்பதற்கு பதிலாக “பாரதத்தின் ஜனாதிபதி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மற்ற எல்லா நடவடிக்கைகளையும் போலவே இந்த நடவடிக்கையும் இந்திய அரசியலமைப்பிற்கு முரணானது என தெரிவிக்கப்படுகிறது.
battinaatham