Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
துப்பாக்கிச் சூட்டை அடுத்து அவுஸ்திரேலியாவில் கடுமையாகும் சட்டங்கள்!

துப்பாக்கிச் சூட்டை அடுத்து அவுஸ்திரேலியாவில் கடுமையாகும் சட்டங்கள்!

9 months ago
in உலக செய்திகள், செய்திகள்

அவுஸ்திரேலியாவின் சிட்னி, பொண்டி கடற்கரையில் நேற்று (14) இடம்பெற்ற சம்பவத்தைத் தொடர்ந்து, நாட்டில் துப்பாக்கி தொடர்பான சட்டங்களை கடுமையாக்குவது குறித்து அந்நாட்டு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் ஏற்படுவதைத் தடுப்பதற்கு பொருத்தமான எந்தவொரு நடவடிக்கையையும் எடுப்பதற்கு அரசாங்கம் தயங்காது என அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதற்கமைய, ஒருவருக்கு வழங்கக்கூடிய துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தல், அனுமதிப்பத்திர மீளாய்வு காலப்பகுதியொன்றை அறிமுகப்படுத்தல் போன்றவை தொடர்பில் இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாகவும் அவுஸ்திரேலிய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

சிட்னி பொண்டி கடற்கரையில் நேற்று (14) இரண்டு துப்பாக்கிதாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுத் தொடரில் 10 வயதுச் சிறுமி உட்பட 15 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதுடன், மேலும் 40 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிதாரிகள் இருவரும் 50 வயதுடைய சஜிட் அக்ரம் மற்றும் அவரது 24 வயது மகனான நவீட் அக்ரம் என தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், பொலிஸ் நடவடிக்கையின் போது சஜிட் அக்ரம் என்பவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

சஜிட் அக்ரம் என்பவர் 1998 ஆம் ஆண்டு மாணவர் வீசாவில் அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளதுடன், அவரது மகனான நவீட் அக்ரம் அவுஸ்திரேலியாவில் பிறந்தவர் எனவும், அவர் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பொன்றுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் 2019 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலிய பாதுகாப்புத் தரப்பினரின் கண்காணிப்புக்கு உள்ளாகியிருந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் சஜிட் அக்ரம் என்பவர் விலங்குகளை வேட்டையாடுவதற்காக 2015 ஆம் ஆண்டிலிருந்து துப்பாக்கி அனுமதிப்பத்திரத்தை வைத்திருந்தவர் என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

90 நாடுகளின் ஊடகவியலாளர்கள் பங்கேற்புடன் ‘CIPCC’ பீஜிங்கில் ஆரம்பம்!
உலக செய்திகள்

90 நாடுகளின் ஊடகவியலாளர்கள் பங்கேற்புடன் ‘CIPCC’ பீஜிங்கில் ஆரம்பம்!

September 5, 2026
மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!
காணொளிகள்

மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!

September 5, 2026
ஈரானுடனான மோதல் எங்களுக்கு சிறிய விடயம்; ட்ரம்ப்!
உலக செய்திகள்

ஈரானுடனான மோதல் எங்களுக்கு சிறிய விடயம்; ட்ரம்ப்!

September 5, 2026
கொழும்பில் இளம் தமிழ் யுவதி கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை; சந்தேகநபரின் சடலமும் மீட்பு!
செய்திகள்

கொழும்பில் இளம் தமிழ் யுவதி கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை; சந்தேகநபரின் சடலமும் மீட்பு!

September 5, 2026
மாட்டைக் காப்பாற்ற முயன்றபோது விபத்து; உழவு இயந்திரம் குளத்தில் கவிழ்ந்து 17 வயது இளைஞர் பலி
செய்திகள்

மாட்டைக் காப்பாற்ற முயன்றபோது விபத்து; உழவு இயந்திரம் குளத்தில் கவிழ்ந்து 17 வயது இளைஞர் பலி

September 5, 2026
மின்வெட்டு குறித்து அச்சம் வேண்டாம்; மின்சார விநியோகத்தில் தடையில்லை என அமைச்சர் அறிவிப்பு!
செய்திகள்

மின்வெட்டு குறித்து அச்சம் வேண்டாம்; மின்சார விநியோகத்தில் தடையில்லை என அமைச்சர் அறிவிப்பு!

September 5, 2026
Next Post
திருகோணமலை இளம் குடும்பஸ்தர் திடீர் உயிரிழப்பு

திருகோணமலை இளம் குடும்பஸ்தர் திடீர் உயிரிழப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு