Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
செயலிழந்திருந்த சிக்னல் விளக்குகள்; 3,200 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ் கைது

செயலிழந்திருந்த சிக்னல் விளக்குகள்; 3,200 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ் கைது

10 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மோட்டார் சைக்கிளின் சிக்னல் விளக்குகள் செயலிழந்திருந்தமை தொடர்பான போக்குவரத்து வழக்கில் சட்ட நடவடிக்கை எடுக்காமல், பொலிஸ் பொறுப்பிலுள்ள சாரதி அனுமதிப் பத்திரத்தை திரும்ப வழங்குவதற்காக 3,200 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி, தனது மோட்டார் சைக்கிளின் சிக்னல் விளக்குகள் வேலை செய்யாத காரணத்தினால் பொலிஸாரால் சாரதி அனுமதிப்பத்திரம் பொறுப்பேற்கப்பட்டதாகவும், சட்ட நடவடிக்கை எடுக்காமல் அதனைத் திரும்ப ஒப்படைக்க பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் 3,200 ரூபாய் இலஞ்சம் கோருவதாகவும் எத்தால பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தார்.

சந்தேக நபரான பொலிஸ் சார்ஜன்ட் முதலில் 2,200 ரூபாயைக் கோரியிருந்த நிலையில், பின்னர் நேற்று முன்தினம் (17) மேலதிகமாக 1,000 ரூபாயைக் கோரியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிலாபம் தலைமையக பொலிஸ் நிலையத்தில் (போக்குவரத்துப் பிரிவு பதில் பொறுப்பதிகாரி) பணியாற்றும் குறித்த பொலிஸ் சார்ஜன்ட், நேற்று மாலை 4.10 மணியளவில் பொலிஸ் நிலையத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் வைத்து இலஞ்சப் பணத்தைப் பெற்றுக்கொள்ள முயன்றபோது, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மலேசிய பாடசாலையில் 16 வயது மாணவன் தலையில் தொலைபேசியை பொருத்திக்கொண்டு செய்த கொடூரம்
உலக செய்திகள்

மலேசிய பாடசாலையில் 16 வயது மாணவன் தலையில் தொலைபேசியை பொருத்திக்கொண்டு செய்த கொடூரம்

October 23, 2026
சீனாவின் புதிய H2-X மனித உருவ ரோபோ அறிமுகம்; 8 மணிநேரம் இயங்கும் திறன்!
உலக செய்திகள்

சீனாவின் புதிய H2-X மனித உருவ ரோபோ அறிமுகம்; 8 மணிநேரம் இயங்கும் திறன்!

October 23, 2026
இலஞ்சக் குற்றச்சாட்டு; எம்.பி. சாமர சம்பத் தசநாயக்கவின் விளக்கமறியல் நவம்பர் 6 வரை நீடிப்பு!
செய்திகள்

இலஞ்சக் குற்றச்சாட்டு; எம்.பி. சாமர சம்பத் தசநாயக்கவின் விளக்கமறியல் நவம்பர் 6 வரை நீடிப்பு!

October 23, 2026
நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு; நவம்பர் 6 வரை நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு; நவம்பர் 6 வரை நீதிமன்றம் உத்தரவு!

October 23, 2026
அந்தமான் தீவுகளை அண்மித்து தாழமுக்கம்; நாட்டில் 27ஆம் திகதி வரை கடும் மழை
செய்திகள்

அந்தமான் தீவுகளை அண்மித்து தாழமுக்கம்; நாட்டில் 27ஆம் திகதி வரை கடும் மழை

October 23, 2026
இலங்கை சிறைச்சாலைகள் நரகமாக உள்ளன;  நாமல் ராஜபக்ஷ கடும் விமர்சனம்!
செய்திகள்

இலங்கை சிறைச்சாலைகள் நரகமாக உள்ளன; நாமல் ராஜபக்ஷ கடும் விமர்சனம்!

October 23, 2026
Next Post
இலங்கைக்கான 200 மில்லியன் டொலர் அவசர நிதி குறித்து இன்று கூடுகிறது IMF நிறைவேற்று சபை

இலங்கைக்கான 200 மில்லியன் டொலர் அவசர நிதி குறித்து இன்று கூடுகிறது IMF நிறைவேற்று சபை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு