Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கணிதப் பரீட்சையில் குறைத்த புள்ளிகள்; 160 பிரம்படிகள் கொடுத்த தனியார் கல்வி நிலைய ஆசிரியர்

கணிதப் பரீட்சையில் குறைத்த புள்ளிகள்; 160 பிரம்படிகள் கொடுத்த தனியார் கல்வி நிலைய ஆசிரியர்

6 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கணிதப் பாடப் பரீட்சையில் புள்ளிகள் குறைந்ததாகக் கூறி, தனியார் வகுப்பு ஆசிரியர் மாணவி ஒருவரின் கைகளில் பிரம்பால் 160 தடவைகள் அடித்து காயப்படுத்திய சம்பவம் காலியில் இடம்பெற்றுள்ளது.

காலி நகரில் உள்ள தனியார் கல்வி நிலையமொன்றில், தரம் 11 இல் கல்வி பயிலும் மாணவி ஒருவரே இந்த மனிதாபிமானமற்ற தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

குறித்த மாணவிக்கு ஆசிரியர் கணித வினாத்தாள் ஒன்றை வழங்கியுள்ளார்.அதில் அந்த மாணவி எதிர்பார்த்ததை விட 32 புள்ளிகள் குறைவாகப் பெற்றுள்ளார்.

இதனால் அந்த மாணவியின் இரு கைகளிலும் ஆசிரியர் 160 முறை பிரம்பால் அடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் பலத்த காயமடைந்த மாணவி, தற்போது காலி கராப்பிட்டிய போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான தனியார் வகுப்பு ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர் பல்கலைக்கழகம் ஒன்றில் இரண்டாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மாணவியின் தந்தை அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், காலி தலைமையக பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதனிடையே தாக்குதலுக்கு உள்ளான மாணவியின் உறவினர்கள் தன்னைத் தாக்கியதாகக் கூறி, குறித்த ஆசிரியரும் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்

வழக்கை விசாரித்த காலி மேலதிக நீதவான் மஹேஷிகா விஜேதுங்க, தலா 3 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல நேற்று அனுமதித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பிக்குவுக்கு 24 ஆண்டுகள் கடுழியச் சிறைத்தண்டனை
செய்திகள்

சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பிக்குவுக்கு 24 ஆண்டுகள் கடுழியச் சிறைத்தண்டனை

June 7, 2026
தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த 5 உறுப்பினர்களை பதவி நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி
அரசியல்

தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த 5 உறுப்பினர்களை பதவி நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி

June 7, 2026
சில கரையோர பகுதிகளுக்கு எச்சரிக்கை; மறு அறிவித்தல் வரும் வரை கடலுக்கு செல்லவேண்டாம்
செய்திகள்

சில கரையோர பகுதிகளுக்கு எச்சரிக்கை; மறு அறிவித்தல் வரும் வரை கடலுக்கு செல்லவேண்டாம்

June 7, 2026
சஹாரா பாலைவனத்தில் துயரம்: ஹஜ் பெருநாளை முடித்து கொண்டு திரும்பிய 49 பேர் குடிநீர் இல்லாததால் மரணம்
செய்திகள்

சஹாரா பாலைவனத்தில் துயரம்: ஹஜ் பெருநாளை முடித்து கொண்டு திரும்பிய 49 பேர் குடிநீர் இல்லாததால் மரணம்

June 7, 2026
ஒரு பாடலுக்கு பயப்படுவது வேடிக்கையான விடயம்; சாணக்கியன்
செய்திகள்

ஒரு பாடலுக்கு பயப்படுவது வேடிக்கையான விடயம்; சாணக்கியன்

June 7, 2026
பெற்றோரின் சொத்துக்களை பெற்றுக்கொண்டு அவர்களை கைவிடும் பிள்ளைகளின் சொத்துக்கள் அரசுடமையாக்கும் சட்டம்
செய்திகள்

பெற்றோரின் சொத்துக்களை பெற்றுக்கொண்டு அவர்களை கைவிடும் பிள்ளைகளின் சொத்துக்கள் அரசுடமையாக்கும் சட்டம்

June 7, 2026
Next Post
ரவூப் ஹக்கீம் எம்பியின் ஆராய்ச்சி அதிகாரியாக ஓட்டமாவடி யஸீர் அறபாத் நியமனம்

ரவூப் ஹக்கீம் எம்பியின் ஆராய்ச்சி அதிகாரியாக ஓட்டமாவடி யஸீர் அறபாத் நியமனம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு