Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாகன வரி மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி – புதிய டிஜிட்டல் இணைப்பு அறிமுகம்

வாகன வரி மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி – புதிய டிஜிட்டல் இணைப்பு அறிமுகம்

7 months ago
in செய்திகள்

இலங்கையில் வாகன இறக்குமதியின் போது இடம்பெறும் பாரிய வரி ஏய்ப்பு மற்றும் தரவு மோசடிகளைத் தடுப்பதற்காக, சுங்கத் திணைக்களம் மற்றும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் (DMT) ஆகியவற்றுக்கிடையே புதிய டிஜிட்டல் இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சுங்கத் திணைக்களத்தின் ‘ASYCUDA World’ மென்பொருள் மூலம் வாகனத்தின் இயந்திர இலக்கம், உற்பத்தி ஆண்டு மற்றும் செலுத்தப்பட்ட வரி விபரங்கள் நேரடியாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திற்கு டிஜிட்டல் முறையில் அனுப்பப்படும்.

கோபா நடத்திய விசாரணையில், இரு திணைக்களங்களுக்கும் இடையே முறையான கணினி இணைப்பு இல்லாததால், வாகனத்தின் உற்பத்தி ஆண்டு, இயந்திரத் திறன் மற்றும் உற்பத்தி நாடு போன்ற தரவுகள் மாற்றப்பட்டு மோசடிகள் இடம்பெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த நேரடித் தரவுப் பரிமாற்றத்தின் மூலம் வாகனங்களின் இயந்திரத் திறனைக் குறைத்துக் காட்டி வரி ஏய்ப்புச் செய்வது மற்றும் உற்பத்தி ஆண்டை மாற்றிப் பதிவு செய்வது போன்ற மோசடிகள் இனி சாத்தியப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாகனங்களைப் பதிவு செய்வதற்கு முன்னதாக, சுங்கத் தரவுகளை நிகழ்நேரத்தில் சரிபார்க்கும் அதிகாரம் மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் 2025 நவம்பர் 6 அன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின்படி,சுங்கம், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம், உள்நாட்டு இறைவரி மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டுத் திணைக்களம் ஆகிய 4 முக்கிய நிறுவனங்களையும் எதிர்காலத்தில் ஒரே டிஜிட்டல் வலையமைப்பில் இணைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நெல் கொள்வனவில் அம்பாறை முன்னிலை; 148 களஞ்சியங்கள் திறக்க திட்டம்!
செய்திகள்

நெல் கொள்வனவில் அம்பாறை முன்னிலை; 148 களஞ்சியங்கள் திறக்க திட்டம்!

July 24, 2026
வடக்கு சொகுசு பேருந்து சேவை தொடர்பில் பயணிகள் வாட்சப்பில் முறைப்பாடு செய்யலாம்
செய்திகள்

வடக்கு சொகுசு பேருந்து சேவை தொடர்பில் பயணிகள் வாட்சப்பில் முறைப்பாடு செய்யலாம்

July 24, 2026
மட்டக்களப்பு வாவிக்கரையில் வெற்றிகரமாக நடைபெற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டம்
செய்திகள்

மட்டக்களப்பு வாவிக்கரையில் வெற்றிகரமாக நடைபெற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டம்

July 24, 2026
லண்டனில் தமிழர்களுக்கு நீதி கோரி கறுப்பு ஜூலை நினைவேந்தல் போராட்டம்!
உலக செய்திகள்

லண்டனில் தமிழர்களுக்கு நீதி கோரி கறுப்பு ஜூலை நினைவேந்தல் போராட்டம்!

July 24, 2026
பிள்ளையானுக்கு 4ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு
செய்திகள்

பிள்ளையானுக்கு 4ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு

July 24, 2026
பால் உற்பத்தியை அதிகரிக்க ரூ.1000 மில்லியன் ஒதுக்கீடு
செய்திகள்

பால் உற்பத்தியை அதிகரிக்க ரூ.1000 மில்லியன் ஒதுக்கீடு

July 24, 2026
Next Post
குருக்கள்மடம் ஏத்தாலைக்குளத்தில் மீண்டும் திரண்ட வெளிநாட்டு பறவைகள்

குருக்கள்மடம் ஏத்தாலைக்குளத்தில் மீண்டும் திரண்ட வெளிநாட்டு பறவைகள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு