Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இன்று இயேசு பிரான் பிறந்தநாள்; மட்டு புளியந்தீவு புனித மரியால் பேராலயத்தில் விசேட வழிபாடுகள்

இன்று இயேசு பிரான் பிறந்தநாள்; மட்டு புளியந்தீவு புனித மரியால் பேராலயத்தில் விசேட வழிபாடுகள்

7 months ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மனிதத்தினை உலகுக்கு வெளிப்படுத்திய ஜேசு பிரானின் அவதாரத்தினை சிறப்பிக்கும் கிறிஸ்மஸ் பிறப்பினை முன்னிட்டு நள்ளிரவு (24)ஆலயங்களில் விசேட வழிபாடுகள் நடைபெற்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான கிறிஸ்மஸ் வழிபாடுகள் மாவட்டத்தின் முதல் பேராலயமான புளியந்தீவு புனித மரியால் பேராலயத்தில் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் சிறப்பாக நடைபெற்றன.

புனித மரியாள் பேராலய பங்குத்தந்தை அருட்தந்தை லெஸ்லி ஜெயகாந்தன் அடிகளின் பங்குபற்றுதலுடன் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களுக்கான பேராயர் கலாநிதி அன்ரன் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இதன்போது விசேட ஆராதனைகள் நடைபெற்றன.

இதன்போது ஜேசு பிறப்பினை குறிக்கும் வகையில் பாலன் பிறப்பு கொட்டில் திறக்கப்பட்டு, பாலன் திருச்சொரூபம் வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கிறிஸ்மஸ் ஆராதனைகள் நடைபெற்றதுடன் கரோல் கீதங்களும் பாடப்பட்டன.

இதன்போது நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிர்நீர்த்தவர்களின் ஆத்மசாந்திக்காகவும் பாதிக்கப்பட்ட மக்கள் அதிலிருந்து விரைவாக மீட்சிபெறவும் நாட்டில் நீடித்த அமைதியும் மகிழ்ச்சி நிலவவும் விசேட பிரார்த்தனையும் ஆயரினால் நடாத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து கிறிஸ்மஸ் விசேட கூட்டுத்திருப்பலி ஆலயத்தின் பங்குத்தந்தை மற்றும் அருட்தந்தையர்கள், ஆயர் ஆகியோர் இணைந்து ஒப்புக்கொடுத்தனர்.

திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதை தொடர்ந்து அனைவருக்கும் ஆயர் மற்றும் அருட்தந்தையர்களினால் அருளாசி வழங்கப்பட்டது.

அத்துடன் கிறிஸ்மஸ் ஆராதனையை முன்னிட்டு தேவாலயத்தில் இராணுவத்தினரும் பொலிஸாரும் பலத்த பாதுகாப்பினை வழங்கியிருந்தது.இதன்போது பெருமளவான புலனாய்வுத்துறையினரும் குறித்த பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர்.விசேட அதிரடிப்படையினர் விசேட ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்ததை காணமுடிந்தது.

ஜேசு பிறப்பின் 2025ஆவது ஆண்டாகவுள்ளதனால் பொப் ஆண்டகையினால் ஜுப்லி ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சிறைச்சாலை அதிகாரிகளில் அதிகரிக்கும் உடல்நலப் பிரச்சினைகள்; 2025 அறிக்கை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
செய்திகள்

சிறைச்சாலை அதிகாரிகளில் அதிகரிக்கும் உடல்நலப் பிரச்சினைகள்; 2025 அறிக்கை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

July 24, 2026
குழந்தையின் பிறந்தநாள் விழாவில் துப்பாக்கிச் சூடு; காயமடைந்த நபர் உயிரிழப்பு!
செய்திகள்

குழந்தையின் பிறந்தநாள் விழாவில் துப்பாக்கிச் சூடு; காயமடைந்த நபர் உயிரிழப்பு!

July 24, 2026
துறைமுக நகரில் கடத்தப்பட்ட சீனப் பிரஜை கொலை; சடலம் காட்டுப் பகுதியில் மீட்பு – இருவர் கைது
செய்திகள்

துறைமுக நகரில் கடத்தப்பட்ட சீனப் பிரஜை கொலை; சடலம் காட்டுப் பகுதியில் மீட்பு – இருவர் கைது

July 24, 2026
தமிழ், சிங்கள பாடசாலைகளின் இரண்டாம் தவணை இன்று நிறைவு; திங்கட்கிழமை மூன்றாம் தவணை ஆரம்பம்!
செய்திகள்

தமிழ், சிங்கள பாடசாலைகளின் இரண்டாம் தவணை இன்று நிறைவு; திங்கட்கிழமை மூன்றாம் தவணை ஆரம்பம்!

July 24, 2026
இலங்கையிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு புதிய வரியை விதித்தது அமெரிக்கா
உலக செய்திகள்

இலங்கையிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு புதிய வரியை விதித்தது அமெரிக்கா

July 24, 2026
முகநூல் நட்பு பெயரில் ரூ.8.37 இலட்சம் மோசடி; மட்டக்களப்பில் பெண் ஒருவர் பணம் இழப்பு!
செய்திகள்

முகநூல் நட்பு பெயரில் ரூ.8.37 இலட்சம் மோசடி; மட்டக்களப்பில் பெண் ஒருவர் பணம் இழப்பு!

July 24, 2026
Next Post
கிறிஸ்மஸை முன்னிட்டு அனைத்து சிறைச்சாலை கைதிகளுக்கும் விசேட சலுகை

கிறிஸ்மஸை முன்னிட்டு அனைத்து சிறைச்சாலை கைதிகளுக்கும் விசேட சலுகை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு