Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சம்மாந்துறை சபூர் வித்தியாலய அதிபர் இடமாற்றத்திற்கு எதிராக இன்றும் பாரிய போராட்டம்

சம்மாந்துறை சபூர் வித்தியாலய அதிபர் இடமாற்றத்திற்கு எதிராக இன்றும் பாரிய போராட்டம்

8 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சம்மாந்துறை கமு/சது/சபூர் வித்தியாலய அதிபரின் திடீர் இடமாற்றத்தை உடனடியாக இரத்துச் செய்யக்கோரி, இன்று (09) காலை பாடசாலைக்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், பின்னர் சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்திற்கு முன்னால் பாரிய முற்றுகைப் போராட்டமாக மாற்றமடைந்தது.

குறித்த போராட்டத்தில் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு, வலயக் கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு தமது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இன்று காலை சபூர் வித்தியாலயத்திற்கு முன்னால் ஒன்று திரண்ட போராட்டக்காரர்கள், அதிபரின் இடமாற்றத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து, போராட்டக்குழுவினர் சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்திற்கு ஊர்வலமாகச் சென்று, அலுவலக நுழைவாயிலை மறித்து கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திறமையான நிர்வாகத்துடன் பாடசாலையை கல்வி மற்றும் ஒழுக்க ரீதியாக முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் சென்ற அதிபரை, முறையற்ற விதத்தில் இடமாற்றம் செய்வது பாடசாலைச் சமூகத்துக்கு இழைக்கும் அநீதியாகும் என பெற்றோர்கள் விசனம் தெரிவித்தனர். “கல்வி அதிகாரிகளே, எமது பாடசாலையின் வளர்ச்சியில் விளையாடாதீர்கள்”,“அதிபரின் இடமாற்றத்தை உடனே நிறுத்துங்கள்” எனும் வாசகங்கள் அடங்கிய சுலோகங்களை ஏந்தியவாறு அவர்கள் நீண்ட நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் இறுதிக் கட்டமாக, பாடசாலைச் சமூகம் மற்றும் பெற்றோர்கள் சார்பில் தயாரிக்கப்பட்ட விசேட கோரிக்கை மனு சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலக அதிகாரியிடம் கையளிக்கப்பட்டது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை
செய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை

September 7, 2026
யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு
செய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு

September 7, 2026
நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
Next Post

மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடி; ஐ.எம்.எப் எச்சரிக்கையை அம்பலப்படுத்திய திலித்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.