Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சமூக ஊடகங்களில் பரவிய பெண் துஷ்பிரயோக காணொளி; சந்தேகநபர் கைது

சமூக ஊடகங்களில் பரவிய பெண் துஷ்பிரயோக காணொளி; சந்தேகநபர் கைது

6 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சமூக ஊடகங்களில் பரவிய பெண்ணொருவரை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கும் காணொளி ஒன்று தொடர்பாக சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு மற்றும் விசாரணைப் பணியகத்தினால் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் நேற்று முன்தினம் (18) ஹிக்கடுவை பிரதேசத்தில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் மறைந்திருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் 43 வயதுடைய பொரளை, பெயார்பீல்ட் வத்தை பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபருக்கு உதவியளித்த மற்றும் பொலிஸாருக்கு சாட்சியங்களை மறைத்த எஹலியகொட பிரதேசத்தைச் சேர்ந்த 44 மற்றும் 55 வயதுடைய இரண்டு நபர்களும் இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆணொருவர் பெண்ணொருவரை நிர்வாணமாக்கும் வகையிலான காணொளி ஒன்று கடந்த நாட்களில் சமூக ஊடகங்கள் ஊடாக பரவியிருந்தது.

அச்சம்பவம் தொடர்பாக சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரின் ஆலோசனை மற்றும் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய பாதிக்கப்பட்ட தரப்பினர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்போது, பிரபல வர்த்தகரான சந்தேக நபர் தனது வீட்டில் பணிப்பெண்ணாக கடமையாற்றிய பெண்ணொருவரை, குழுவினர் முன்னிலையில் அந்த வீட்டிலேயே நிர்வாணமாக்கி அதனை காணொளி எடுத்து வட்ஸ்அப் குழுவொன்றின் ஊடாக சமூக ஊடகங்களுக்கு விடுவித்துள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த சந்தேக நபர் தொடர்பாக பொலிஸார் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் சமர்ப்பணங்களை சமர்ப்பித்து வெளிநாட்டுப் பயணத் தடையையும் பெற்று விசாரணைகளை மேற்கொண்டு வந்துள்ளதுடன், சந்தேக நபர் சம்பவத்தின் பின்னர் பொலிஸாருக்குத் தெரியாமல் பிரபல ஹோட்டல்கள் சிலவற்றில் தங்கியிருந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு மற்றும் விசாரணைப் பணியகம் மேற்கொண்டு வருகின்றது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்
செய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

July 22, 2026
மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை
செய்திகள்

மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை

July 22, 2026
பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது
செய்திகள்

பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது

July 22, 2026
செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!
செய்திகள்

செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!

July 22, 2026
மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!
செய்திகள்

மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!

July 22, 2026
மன்னார் நோக்கிச் சென்ற அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் விபத்து
செய்திகள்

மன்னார் நோக்கிச் சென்ற அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் விபத்து

July 22, 2026
Next Post
அஸ்வெசும சமூக நலத்திட்டம் குறித்து பாராளுமன்றத்தில் இன்று விவாதம்

அஸ்வெசும சமூக நலத்திட்டம் குறித்து பாராளுமன்றத்தில் இன்று விவாதம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.