Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
15 சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிலையங்கள் முடக்கம்;121 பேர் கைது

15 சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிலையங்கள் முடக்கம்;121 பேர் கைது

8 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் பொலிஸ் பிரிவு அதிகாரிகளுக்கும், வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர அவர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று நேற்று (20) நடைபெற்றது.

மக்களை மையமாகக் கொண்ட சட்ட அமுலாக்கத்தை மேலும் வலுப்படுத்துவதோடு, விசேட விசாரணைப் பிரிவின் இதுவரை பெற்றுக்கொண்ட முன்னேற்றங்களை மீளாய்வு செய்வதற்காக இக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கடந்த 2025 ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதியில், விசேட விசாரணைப் பிரிவு வெளிநாட்டுப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு மிகவும் சாதகமான முடிவுகளைப் பெற்றுக்கொடுத்துள்ளதாக அமைச்சரிடம் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

அந்த ஆண்டில் மொத்தம் 4,822 பொது முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், முறையான விசாரணைகள் மூலம் 2,914 முறைப்பாடுகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

மேலும் சில முறைப்பாடுகள் தொடர்பில் நீதிமன்றங்களில் 772 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், விசாரணைகளைத் தொடர்ந்து 121 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அமைச்சரிடம் விளக்கமளித்தனர்.

சட்டவிரோத ஆட்சேர்ப்பு தொடர்பான குற்றங்களுக்கு எதிராக 21 சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட முறைப்பாட்டாளர்களுக்கு 380 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பணம் மீண்டும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டமை உறுதிப்படுத்தப்பட்ட 15 வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களின் அனுமதிப்பத்திரங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் வெளிப்படுத்தப்பட்டது.

2025 செப்டம்பர் 22 அன்று வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்குள் நிறுவப்பட்ட பிரத்யேக பொலிஸ் பிரிவு காரணமாக, விசாரணைகள் மற்றும் சட்ட அமுலாக்க நடவடிக்கைகள் மேலும் வலுவடைந்து வேகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர்கள் அமைச்சரிடம் வலியுறுத்தினர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை
செய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை

September 7, 2026
யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு
செய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு

September 7, 2026
நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
Next Post
பராமரிப்புப் பணிகளுக்காக 1,000 இலங்கையர்களை இஸ்ரேலிற்க்கு அனுப்பத் திட்டம்

பராமரிப்புப் பணிகளுக்காக 1,000 இலங்கையர்களை இஸ்ரேலிற்க்கு அனுப்பத் திட்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.