Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பராமரிப்புப் பணிகளுக்காக 1,000 இலங்கையர்களை இஸ்ரேலிற்க்கு அனுப்பத் திட்டம்

பராமரிப்புப் பணிகளுக்காக 1,000 இலங்கையர்களை இஸ்ரேலிற்க்கு அனுப்பத் திட்டம்

8 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

2026 ஆம் ஆண்டில் இஸ்ரேலில் வீட்டு அடிப்படையிலான பராமரிப்புப் பணிகளுக்காக (Home-based Caregiving) ஆயிரம் இலங்கையர்களைப் பணியமர்த்த இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் திட்டமிட்டுள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அல்லது பணியகத்தில் பதிவுசெய்யப்பட்ட பயிற்சி நிறுவனத்தில் பராமரிப்புப் பயிற்சிப் பாடநெறியை முடித்து NVQ III சான்றிதழ் பெற்றிருப்பவர்கள் அல்லது செவிலியர் தொழிலில் குறைந்தது 11 மாத அனுபவம் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என பணியகம் தெரிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் 25 முதல் 45 வயதுக்குட்பட்டவர்களாகவும், க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றியவர்களாகவும் இருத்தல் வேண்டும்.

அத்துடன், சிறந்த ஆங்கில மொழி அறிவு அவசியமானது என்பதுடன், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் நடத்தப்படும் ஆங்கில மொழிப் பயிற்சிப் பாடநெறியைப் பூர்த்தி செய்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்களாவர்.

இப்பணிகளுக்காகத் தெரிவு செய்யப்படுபவர்களுக்கு ஐந்து வருட கால செல்லுபடியாகும் விசா வழங்கப்படும் என்பதுடன், மாதம் 6 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான ஊதியத்தைப் பெறும் வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் இஸ்ரேல் அரசாங்கங்களுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த ஒப்பந்தத்தின் கீழ் இதுவரை 2,656 இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன.

மேலும், 2026 ஆம் ஆண்டு ஆரம்பமாகி கடந்த இரண்டு வார காலப்பகுதிக்குள் 107 இலங்கை பராமரிப்புப் பணியாளர்களை இஸ்ரேலுக்கு அனுப்ப முடிந்துள்ளதாகவும் பணியகம் வெளிப்படுத்தியுள்ளது.

இந்த வேலைவாய்ப்புகள் இஸ்ரேல் அரசாங்கத்தின் சார்பில் அந்நாட்டின் குடிவரவு மற்றும் குடிஅகல்வு அதிகாரசபை (PIBA) மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஆகியவற்றின் ஊடாக அரசாங்கத்தினால் மாத்திரமே வழங்கப்படுகின்றன. எனவே, வேறு வெளி நிறுவனங்கள் அல்லது நபர்கள் மூலம் இஸ்ரேலில் பராமரிப்புப் பணிகளைப் பெற்றுக்கொள்ள முடியாது என பணியகம் வலியுறுத்தியுள்ளது.

இதற்கமைய, இந்த வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்காக எந்தவொரு வெளித்தரப்பினரிடமும் பணம் அல்லது கடவுச்சீட்டை வழங்க வேண்டாம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
Next Post
ரூ.900 மில்லியன் பெறுமதியானஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

ரூ.900 மில்லியன் பெறுமதியானஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.