கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வில் நேற்றைய தினம் இரு மனித எச்சங்கள் மீட்கப்பட்டன. இந்த இரு மனித எச்சங்களில் இருந்த உடைகளை அடிப்படையாகக் கொண்டு அவை பெண் போராளிகளுடையவை என்று கருதப்படுகின்றது. உள்ளாடை மற்றும் பச்சை நிற நீளக்காற்சட்டையில் இலக்கமிடப்பட்டிருந்தன. அத்துடன், துப்பாக்கி தோட்டாக்களும் இருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.
கொக்குத் தொடுவாயில் மனித புதைகுழி அகழ்வு பணிகள் மீண்டும் புதன்கிழமை ஆரம்பமாகி நேற்று வெள்ளிக் கிழமையும் அகழ்வு பணிகள் தொடர்ந்தன. முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி த. பிரதீபன் முன்னிலையில் இது தொடர்பாக, அகழ்வு பணியில் பங் கேற்றிருந்த சட்டத்தரணிகளுள் ஒருவரான கே.
எஸ். நிரஞ்சன் செய்தி யாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், ஏற்கனவே இனங்காணப்பட்ட மனித மனித
எச்சங்களில், இரண்டு மனித எச்சங்கள் முழு மையாக அகழ்ந்து எடுக் கப்பட்டுள்ளன.
இவ்வாறு அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் இரண்டும், விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண் போராளிகளு டையவையாக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. அத்தோடு அகழ்வாய்வில் எடுக்கப்பட்ட ஆடைகளில் இலக்கங்களில் இடப்பட்டுள்ளன.அதற்கமைய முதலாவது மனித எச்சத்தின் பச்சைநிற
நீளக்காற் சட்டையில் 3204 என்ற இலக்கமும், முழுநீளக் கை மேற்சட்டையும் 3174 இலக்கமிடப்பட்டு பெண்களின் உள்ளாடைகளும் காணப்பட்டன.தொடர்ந்து இரண்டாவது மனிதஎச்சம் அகழ்ந்தெடுக்கப்பட்டது. அதிலும் பச்சைநிறக் முழுநீளக் காற்சட்டையும், முழுநீளக் கை மேற்சட்டையும்,
1564 இலக்க மிடப்பட்டு பெண்களின் உள்ளாடை களும் காணப்பட்டன. இதேவேளை, அகழ்ந்தெடுக்கப்பட்ட
இரு மனித எச்சங்களிலும் துப்பாக்கி தோட்டாக்கள் இருந்தன. கறுப்பு நிறத்திலான நூலாலேயே ஆடைகளில் இலக்கங்கள் பொறிக்கப்பட்டிருந்தன.மேலும் குறித்த அகழ்வு பணி இடம் பெறும் இடத்தில் தொல்லியல் ஆய்வாளர் பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம், யாழ்ப்பாணம் சட்ட மருத்துவ அதிகாரி, சட்டத்தரணி ரனித்தா ஞானராசா, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள், தடயவியல் பொலிஸரர், அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் பங்கேற்றிருந்தனர்.
அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எச்சங்களும், தடய பொருட்களும் பொதியிடப்பட்டு, சட்ட மருத்துவ அதிகாரியால் பகுப்பாய்வுக்கு கொண்டு செல்லப் பட்டது. கடந்த முறை அகழ்வின் போது 13 மனித உடல் எச்சங்கள் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது