சிறிலங்கன் ஏர்லைன்ஸை தனியார் மயமாக்குவதற்கான விருப்பங்களை சிறிலங்கா அரசாங்கம் தீவிரமாக ஆராய்ந்து, பல்வேறு தனியார் நிறுவனங்கள் மற்றும் விமான நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்காக சாத்தியமான முதலீட்டு நிறுவனங்களான எமிரேட்ஸ், TATA SONS மற்றும் அதானி குழுமம் போன்றவைகளுடன் பேச்சுக்கள் இடம்பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்தியா, பங்களாதேஷ் மற்றும் நேபாளம் போன்றவற்றிற்கு பொறுப்பான சிறிலங்கன் ஏர்லைன்ஸின் பிராந்திய மேலாளர் வீரபெருமாள் இரவீந்திரன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியின்போதே இந்தத் தகவல்களை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில் சிறிலங்கன் ஏர்லைன்ஸ் எதிர்வரும் குளிர்கால கால அட்டவணையின் போது கொழும்பு மற்றும் திருவனந்தபுரம் இடையிலான தனது சேவைகளை வாரத்திற்கு ஆறு தடவைகளில் இருந்து ஏழு தடவையாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.