மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேசத்திற்குட்பட்ட பன்குடாவெளி புலையவெளியில் வியாழக்கிழமை (29) காலை யானை வேலி மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
பன்குடாவெளி புலையவெளியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான செல்வம் கர்ணன் (வயது 48) மற்றும் ஏறாவூர் 5ம் குறிச்சி வெற்றிவேல் வீதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயான தமிழ்ச்செல்வி செல்வகுமார் (வயது 43) ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளதாக அவர்களது உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, தமிழ்ச்செல்வி செல்வகுமார் மற்றும் உயிரிழந்தவரின் மனைவியான ஆறுமுகம் மணியம்மா ஆகியோர் மீன் வாங்குவதற்கு புலையவெளி ஆற்றுக்கு வியாழக்கிழமை (29) காலை செல்லும் வேளையில் பள்ளத்துவட்டை வயல் பகுதியில் நில மட்டத்தில் இருந்த யானை வேலிக்கு மின் கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கியுள்ளது.
சடலங்கள் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பாக கரடியனாறு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.








