சிறிலங்கா இராணுவம் மற்றும் ஊர்காவல் படையினரால் நிகழ்த்தப்ப்பட்ட மட்டக்களப்பு – சத்துருக்கொண்டான் படுகொலையின் 33ஆவது ஆண்டு நினைவுதினம் நேற்று நினைவு கூரப்பட்டது.
நீதி மறுக்கப்பட்டு வரும் சத்துருக்கொண்டான் படுகொலைக்கு சர்வதேச விசாரணை அவசியம் என படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்தனர்.
சத்துருக்கொண்டான் படுகொலையின் 33ஆவது ஆண்டு நினைவு தினம் நேற்று(9) உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டது.
படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக சத்துருக்கொண்டான் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியருகே இந்த நினைவேந்தல் நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது.
படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களினால் நினைவுத்தூபியில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
கடந்த 1990ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 09ஆம் திகதி சிறிலங்கா இராணுவத்தினருடன் இணைந்து ஊர்காவல் படையினரால் சத்துருக்கொண்டான் கொக்குவில் பிள்ளையாரடி கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் குழந்தைகள் கர்ப்பிணி தாய்மார், முதியவர்கள் மற்றும் இளைஞர்கள் என 184 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.