ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு பொறுப்பானவர்கள் தங்களுடைய தவறை ஒப்புக்கொண்டால் தான் உட்பட கத்தோலிக்க திருச்சபை அவர்களுக்கான மன்னிப்பை வழங்க தயாராக உள்ளதாக கர்தினால் மல்கம் ரஞ்சித்ஆண்டகை தெரிவித்துள்ளார்.அவ்வாறு செய்ய முடிய வில்லை எனின் நாம் மதங்களைபின்பற்றுவதால் உள்ள பயன் தான் என்ன எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
அதன்படி, நேற்று முன்தினம் கொழும்பு கொச்சிக்கடை ஆலயத்தில் இடம்பெற்ற பூசை வழிபாடுகளின் பின்னரே அவர்இவ்வாறு கூறினார்அவர் மேலும் தெரிவிக்கை யில்-
என்ன நடந்தது என்பது எங்களுக்கு இன்னும் தெளிவாக தெரியவில்லை. மேலும் மேலும், புதிய காரணங்கள் , புதிய விடயங்கள் வெளிக்கொணரப்பட்டு வருகின்றன.இவ்வாறான விடயங்களால் சிலருக்கு சில சமயங்களில் கோபம் கூட வர வாய்ப்புண்டு. ஏனெனில் இந்த விடயங்களில் அவர்களது பெயர் பயன்படுத் தப்படுகிறது.
பயப்பட வேண்டிய அவசியம் இல்லை அவர்களுக்கும் , குறித்த சம்பவத்துக்கும் எந்தவிதமான தொடர்புகளும் இல்லை எனில் அவர்கள் பயப் பட வேண்டிய அவசியம் இல்லை.எவ்வாறாயினும் இது
தொடர்பிலான காரணங்களை ஆராய்ந்து பார்ப்பது உரியதரப்பினரின் பொறுப்பாகும். உண்மையான , சாதாரணமான, உண்மைத் தன்மையை வெளிப் படுத்தக்கூடிய ஆய்வொன்றை நடத்தி நடந்தது என்ன என்பது தொடர்பில் தெரிவியுங்கள்.அது அவ்வளவு கஷ்டமான ஒரு விடயம் அல்ல. இந்த சந்தர்ப்பத்தில் நான் எமது நாட்டின் தலைவரிடம் மிகவும் தேவையுடன் கோரிக்கை ஒன்றை விடுக்கின்றேன் . ” இதோ,
ஒவ்வொன்றாய் வெளிவர ஆரம்பித்துள்ளன, அதனால் இப்பொழுதாவது நாங்கள் கேட்கும் , உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ள கூடிய வகையிலான ஒரு ஆய்வை மேற் கொள்ளுங்கள்.”
அதேபோல் குறித்த சம்ப வத்தில் எவரொருவரின் பெயர் தெரிவிக்கப்படுகிறதோ அவர்கள்
மரியாதையுடன் தத்தமது பதவிகளிலிருந்து விலகவேண்டும். அது தொடர்பில் உரிய ஆய்வுகளை நடத்த முன்வர வேண்டும் .
அதுவே நேர்மையான முறை. நேர்மை என்பது பதவிகளுக்கு பின்னால் மறைந்து கொள்வது அல்ல. தான் தவறு செய்திருப்பின் அதனை ஆராய வழிவிடுவது தான் நேர்மை. அவ் வாறு இல்லையெனில், தவறு
செய்ததை ஒப்புக்கொள்ளுதல்அவ்வாறு தவறு செய்திருந் தால், அதனை ஒப்புக்கொள் ளுங்கள் நாம் மன்னிக்க தயாராக உள்ளோம்-என்றார்.