Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாளைய தினம் நடைபெறவுள்ள இலங்கையின் சுதந்திர தினத்தை ‘கரிநாளாக’ அனுஷ்டிப்பதற்கு சிறிதரன் எம்.பி ஆதரவு

நாளைய தினம் நடைபெறவுள்ள இலங்கையின் சுதந்திர தினத்தை ‘கரிநாளாக’ அனுஷ்டிப்பதற்கு சிறிதரன் எம்.பி ஆதரவு

7 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாளைய தினம் நடைபெறவுள்ள இலங்கையின் சுதந்திர தினத்தை ‘கரிநாளாக’ அனுஷ்டிக்குமாறு பல்கலைக்கழக மாணவர்கள் தமிழ் மக்களிடம் விடுத்துள்ள வேண்டுகோளுக்கு ஆதரவு தெரிவிப்பதாக தமிழசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

இன்று அவரது இல்லத்தில் இடம்பெற்று ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “1948 இல் இலங்கை சுதந்திரம் பெற்றதாகக் கூறப்பட்டாலும், தமிழ் மக்களுக்கு இதுவரை உண்மையான சுதந்திரம் கிடைக்கவில்லை என்பதையும், தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையையும் வலியுறுத்தி நாளைய தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்குமாறு பல்கலைக்கழக மாணவர்கள் கோரியுள்ளனர்.

குறிப்பாக கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பில் நாளைய தினம் சுதந்திர தினத்திற்கு எதிரான வலுவான போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தமைக்காக திருகோணமலையில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டமையும், 1989 இல் கிளிநொச்சியில் சுதந்திர தினத்தை கொண்டாட முற்பட்ட ஈரோஸ் போராளிகள் மூவர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

தற்போதைய ‘அனுர அரசாங்கம்’ கூட தமிழ் மக்களின் காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை மற்றும் நிரந்தர அரசியல் தீர்வு (சமஷ்டி) போன்ற விடயங்களில் உரிய கரிசனை காட்டவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் தேசிய கொடி தமிழ் மக்களை அரவணைக்கவில்லை எனவும், தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை வெளிப்படுத்தும் வகையில் வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் நாளைய நாளை துக்க நாளாகவும், கரிநாளாகவும் அனுஷ்டித்து மாணவர்களின் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கோருகின்றோம்” என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அனுராதபுர அரசியல் மேடையில் ஏறுகிறார் நாமலின் மனைவி
அரசியல்

அனுராதபுர அரசியல் மேடையில் ஏறுகிறார் நாமலின் மனைவி

September 6, 2026
நாமல் இலஞ்சம் பெறவில்லை…அவருக்கு 8 இலட்சம் டொலர் பரிசாக வழங்கப்பட்டது; கம்மன்பில
செய்திகள்

நாமல் இலஞ்சம் பெறவில்லை…அவருக்கு 8 இலட்சம் டொலர் பரிசாக வழங்கப்பட்டது; கம்மன்பில

September 6, 2026
போதைப்பொருள் வியாபாரியிடம் பணம் , அவரது மனைவியிடம் பாலியல் இலஞ்சம் கோரிய கல்குடா பொலிஸ் நிலைய பொலிஸ் உப பரிசோதகர் பணிநீக்கம்
செய்திகள்

போதைப்பொருள் வியாபாரியிடம் பணம் , அவரது மனைவியிடம் பாலியல் இலஞ்சம் கோரிய கல்குடா பொலிஸ் நிலைய பொலிஸ் உப பரிசோதகர் பணிநீக்கம்

September 6, 2026
மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!
செய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!

September 5, 2026
நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
செய்திகள்

நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

September 5, 2026
பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!
செய்திகள்

பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!

September 5, 2026
Next Post
அபிவிருத்திக்குழு தலைவரின் குடும்பத்துடன் சம்பந்தப்பட்ட ஊழல் உள்ளதா?; சாணக்கியன் ஏன் அவ்வாறு கூறினார்?

அபிவிருத்திக்குழு தலைவரின் குடும்பத்துடன் சம்பந்தப்பட்ட ஊழல் உள்ளதா?; சாணக்கியன் ஏன் அவ்வாறு கூறினார்?

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு