




மட்டக்களப்பு, கோட்டைமுனை – அருள்மிகு அரசடிப்பிள்ளையார் தேவஸ்தானத்தில் புனராவர்த்தன அஷ்டபந்தன பஞ்ச குண்ட பக்ஷ மகா கும்பாபிஷேகம் கடந்த 01.02.2026, ஞாயிற்றுக்கிழமை காலை 07:45 மணிக்கு பக்தர்கள் சூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது.


குறித்த ஆலயத்தின் கிரியைகள் 28.1.2026 அன்று ஆரம்பமாகியிருந்ததுடன், 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் எண்ணைக்காப்பில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.


மூத்த குருமார்கள் மற்றும் உதவி குருமார்கள் உட்பட 17 குருமார்களினால் கும்பாபிஷேக கிரியகாலங்கள் 05 நாட்கள் நடைபெற்றதுடன், ஸ்ரீ தெட்சண கைலாயம் எனப் போற்றப்படும் இச்சிவ ஆலயம், தமிழ்ச் சமயமும் கலாச்சாரமும் மலர்ந்த மட்டக்களப்பு மாநகரின் மையத்தில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.














