உலக புகழ்பெற்ற கூகுள் நிறுவனமானது தகவல் தொழில்நுட்ப உலகில் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி வருகிறது. மேலும் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாகிவிட்ட இன்றைய நிலையில் யூசர்களுக்கு பிடித்தமான பல்வேறு விதமான புதிய செயலிகளையும் உருவாக்கி வருகிறது. அந்த வகையில், கூகுள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள தினசரி பயன்படுத்தக்கூடிய வகையில் கூகுள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள 8 சக்தி வாய்ந்த செயலிகளை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
கூகுள் வாய்ஸ் அசிஸ்டண்ட் :
கூகுள் வாய்ஸ் அசிஸ்டண்ட் உங்களது போனை நீங்கள் வாய்ஸ் மூலம் அக்சஸ் செய்ய அனுமதிக்கிறது. இதன் மூலம் பல்வேறு வேலைகளை மிகவும் எளிதாக நீங்கள் கூகுள் வாய்ஸ் அசிஸ்டண்டிடம் கட்டளை இடுவதன் மூலமே செய்து முடிக்க முடியும். உதாரணத்திற்கு கால் செய்ய கட்டளை இடுவது, அலாரம் செட் செய்வது போன்ற பல்வேறு வேலைகளை கூகுள் வாய்ஸ் அசிஸ்டண்டை நீங்கள் செய்யுமாறு கட்டளை இடலாம்.
கூகுள் ஆக்ஷன் பிளாக்:
கூகுள் ஆக்சன் ப்ளாக் செயலியானது உங்களது ஹோம் ஸ்கிரீனில் கூகுள் அசிஸ்டன்ட்டை வைத்து நீங்கள் இடும் கட்டளைகளை ஒரு பட்டன் போல உருவாக்கி வைக்க உதவுகிறது. இதன் மூலம் நீங்கள் போனில் சென்று ஒவ்வொரு ஆப்ஷனாக சென்று உங்களுக்கு தேவையான வேலையை செய்வதை விட, இந்த கஸ்டமைஸ்டு பட்டனை கிளிக் செய்வதன் மூலமே அதனை எளிதாக செய்து முடிக்க முடியும்.
கூகுள் போட்டோ ஸ்கேன்:
கூகுளின் இந்த போட்டோ ஸ்கேன் செயலி மூலம் உங்களிடம் இருக்கும் புகைப்படங்களை அதிக குவாலிட்டியுடன் ஸ்கேன் செய்ய உதவுகிறது. மேலும் நீங்கள் ஸ்கேன் செய்யும் போதே புகைப்படத்தின் அளவை சரியாக வெட்டுவது, கோணலாக உள்ள புகைப்படத்தை நேராக்குவது, புகைப்படத்தை இன்னும் அருகேற்றுவது என பல்வேறு விதமான வேலைகளை செய்கிறது.
கூகுள் லென்ஸ்:
கூகுள் லென்சை பயன்படுத்தி நம்மிடம் இருக்கும் பல்வேறு பொருட்களையும் மேலும் பிசிக்கலாக எழுதப்பட்டுள்ள எழுத்துக்களையும் ஸ்கேன் செய்து அவற்றை பற்றிய தேடலை கூகுளில் நிகழ்த்த முடியும். மேலும் அவற்றைப் பற்றிய முழு விவரங்களையும் கூகுள் லென்ஸ் நமக்கு கொடுக்கும்.
கூகுள் போன்:
கூகுள் போன் நமக்கு வரும் தேவையற்ற கால்களை பிளாக் செய்யவும், மிக எளிதாக டயல் செய்யவும் உதவுகிறது. மேலும் இதிலிருந்து லொகேஷன்களையும் நம்மால் சர்ச் செய்து பார்க்க இயலும். இதன் எளிய வடிவமைப்பின் மூலம் யூசர்கள் எந்தவித சிரமமும் இன்றி கால் (call) செய்ய உதவுகிறது.
கூகுள் ஃபைல்ஸ்:
நம்முடைய போனில் உள்ள ஃபைல்களை எளிதாக மேனேஜ் செய்ய கூகுள் பைல்ஸ் உதவுகிறது. மிகவும் எளிதான பயன்படுத்தக்கூடிய வகையில் போனில் உள்ள பைல்களை தேடி எடுக்க மிகவும் இது உதவுகிறது. அதுமட்டுமல்லாது தேவையற்ற பைல்களை நீக்கி ஸ்டோரேஜ் அதிகப்படுத்தவும் கூகுள் ஃபைல்ஸ் உதவுகிறது.
கூகுள் ஒன்:
கூகுள் விர்ச்சுவல் பிரைவேட் நெட்வொர்க் உடன் கூகுள் ஒன் நமது போனிற்கு தரமான பாதுகாப்பை வழங்குகிறது. இதன் மூலம் வெளி நபர்கள் அல்லது ஹேக்கர்கள் நம்முடைய டிவைஸை ஆக்சஸ் செய்வதை தடுத்து நம்முடைய டேட்டாவை பாதுகாக்கிறது.
ஃபைன்ட் மை டிவைஸ்:
இந்த செயலியை பயன்படுத்தி நம்முடைய போன் தொலைந்து போனால் கூட வேறொரு டிவைசில் இருந்து உங்களது கூகுள் கணக்கை லாகின் செய்வதன் மூலம் போன் எங்கு இருக்கிறது என்பதை கண்டறிய முடியும் மேலும் அதில் உள்ள தகவல்களை முழுவதுமாக அழித்துவிடவும் முடியும்.