காலி சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது கையடக்கத் தொலைபேசிகள், சிம் அட்டைகள், போதைப்பொருட்கள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.
மொத்தம் 19 கையடக்கத் தொலைபேசிகள், மற்றும் 11 சிம் அட்டைகள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் 4 கிராம் 384 மில்லிகிராம் எடைகொண்ட 58 ஹெரோயின் பொட்டலங்கள் மற்றும் 106 கிராம் 350 மில்லிகிராம் எடைகொண்ட ஹெரோயினும் மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட போதைப்பொருட்கள் காலி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.








