Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நீதிமன்றை தொடர்ந்து புறக்கணிக்கும் கோட்டாபய; சமமான நீதியை வழங்குமாறு யாழில் நகரில் போராட்டம்

நீதிமன்றை தொடர்ந்து புறக்கணிக்கும் கோட்டாபய; சமமான நீதியை வழங்குமாறு யாழில் நகரில் போராட்டம்

4 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

காலத்தை இழுத்தடித்து, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியை மறுக்கும் அரசாங்கத்தின் கொள்கையை வன்மையாகக் கண்டித்தும், லலித், குகன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ச முன்னிலையாகாமைக்கு எதிராகவும் இன்று யாழ். நகரில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

சம உரிமைகள் இயக்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இப் போராட்டம் யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தின் போது. “செம்மணியை மீண்டும் புதைக்க இடமளியோம்”, “அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்”, “மேலதிக அடக்குமுறைச் சட்டங்கள் வேண்டாம்”,”PTA ஐ நீக்கு”, “அனைத்து இன மக்களுக்கும் சமவுரிமையை உறுதிசெய்யும் புதிய அரசியலமைப்பை வென்றெடுப்போம்”, ஆகிய கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டக்காரர்களால் கோசங்கள் எழுப்பப்பட்டன.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதியை காணாமலாக்குவதற்கு இடமளிக்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டதுடன், இலங்கையின் குற்றங்கள் மலிந்த அரசிலால் இன்றுவரை பல குற்றவாளிகள் எவ்வித தடையுமின்றி சுதந்திரமாக நடமாடுகின்றனர். அவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதும் மந்தகதியிலேயே உள்ளது என்றும் போராட்டக்காரர்கள் குற்றம் சுமத்தினர்.

மேலும் வடக்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான நீதிக்காக போராடிய லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு எதிரான வழக்கு இன்று யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த வழக்கின் சாட்சியாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச சாட்சியமளிக்க நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ள நிலையில், இவர் இந்த வழக்கில் சாட்சியமளிப்பதைத் தொடர்ச்சியாகத் தவிர்த்து வந்ததுடன், தற்போது இணையவழியாக சாட்சியமளிப்பதற்கு நீதிமன்றத்திடம் அனுமதி கோரியுள்ளார்.

இவ்வாறு நீதிமன்றத்தைத் தொடர்ச்சியாகப் புறக்கணிப்பதற்கு எதிராகவும், அனைத்துக் காணாமலாக்கப்படல்களுக்கும் நீதியை வழங்க வேண்டும் என்றும் பல்வேறு விடயங்களைச் சுட்டிக்காட்டி இன்றையதினம் குறித்த போராட்டம் முன்னெடுக்கபட்டது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சில கரையோர பகுதிகளுக்கு எச்சரிக்கை; மறு அறிவித்தல் வரும் வரை கடலுக்கு செல்லவேண்டாம்
செய்திகள்

சில கரையோர பகுதிகளுக்கு எச்சரிக்கை; மறு அறிவித்தல் வரும் வரை கடலுக்கு செல்லவேண்டாம்

June 7, 2026
சஹாரா பாலைவனத்தில் துயரம்: ஹஜ் பெருநாளை முடித்து கொண்டு திரும்பிய 49 பேர் குடிநீர் இல்லாததால் மரணம்
செய்திகள்

சஹாரா பாலைவனத்தில் துயரம்: ஹஜ் பெருநாளை முடித்து கொண்டு திரும்பிய 49 பேர் குடிநீர் இல்லாததால் மரணம்

June 7, 2026
ஒரு பாடலுக்கு பயப்படுவது வேடிக்கையான விடயம்; சாணக்கியன்
செய்திகள்

ஒரு பாடலுக்கு பயப்படுவது வேடிக்கையான விடயம்; சாணக்கியன்

June 7, 2026
பெற்றோரின் சொத்துக்களை பெற்றுக்கொண்டு அவர்களை கைவிடும் பிள்ளைகளின் சொத்துக்கள் அரசுடமையாக்கும் சட்டம்
செய்திகள்

பெற்றோரின் சொத்துக்களை பெற்றுக்கொண்டு அவர்களை கைவிடும் பிள்ளைகளின் சொத்துக்கள் அரசுடமையாக்கும் சட்டம்

June 7, 2026
யாழ் விமான நிலையத்தில் நடராஜர் சிலை வைக்க தடையாக இருக்கும் அமைச்சர் சந்திரசேகர்
செய்திகள்

யாழ் விமான நிலையத்தில் நடராஜர் சிலை வைக்க தடையாக இருக்கும் அமைச்சர் சந்திரசேகர்

June 7, 2026
வீட்டு தகராறில் மனைவியின் தாக்குதலில் கணவன் பலி
செய்திகள்

வீட்டு தகராறில் மனைவியின் தாக்குதலில் கணவன் பலி

June 7, 2026
Next Post
நெல் கொள்வனவுக்கு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி; பிரதி அமைச்சர் அரவிந்த செனரத்

நெல் கொள்வனவுக்கு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி; பிரதி அமைச்சர் அரவிந்த செனரத்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு