உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெறும் விடயம் சில அமைச்சர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் முன்கூட்டியே தெரியும் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக நாடாளுமன்றில் நடந்த விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
உயிர்த்தஞாயிறு தாக்குதலில் 300 ற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததுடன் 500 ற்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்த நிலையில் அந்த வடுக்களுடன் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
தாக்குதலை மேற்கொண்ட சஹ்ரானுக்கு எதிராக நீதிமன்ற பிடியாணை இருந்தது. ஆனால் அவர் கைது செய்யப்படவில்லை.அவர் கைது செய்யப்பட்டிருந்தால் இந்த தாக்குதலை தடுத்திருக்கலாம்.
வவுணதீவில் இரண்டு காவல்துறையினர் சஹ்ரான்குழுவினரால் கோரமாக கொலை செய்யப்பட்டிருந்தனர். அவர்களும் கைது செய்யப்படவில்லை.மாறாக அப்பாவியான முன்னாள் போராளி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார் என அவர் தெரிவித்தார்.