Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன மீது 8 குற்றச்சாட்டுகள்; ஆவணங்கள் கோரி விசாரணை முன்னெடுக்கும் ஆணைக்குழு

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன மீது 8 குற்றச்சாட்டுகள்; ஆவணங்கள் கோரி விசாரணை முன்னெடுக்கும் ஆணைக்குழு

7 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக, இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பிரதி செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன முன்வைத்துள்ள ஊழல் முறைப்பாடு குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு கையூட்டல் ஒிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேசமயம், சமிந்த குலரத்னவின் நியமனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக ஆர். கண்ணன் என்ற தனிநபர் அளித்த முறைப்பாட்டையும் ஆணைக்குழு விசாரிக்கவுள்ளது.

சமிந்த குலரத்ன தாக்கல் செய்துள்ள முறைப்பாட்டில் சபாநாயகருக்கு எதிராக 8 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

இரண்டு எரிபொருள் கொடுப்பனவுகளை சட்டவிரோதமாகப் பெற்றமை, அதிகாரப்பூர்வ வாகனங்களைத் தவறாகப் பயன்படுத்தியமை, நாடாளுமன்ற ஊடக உபகரணங்களைத் தனிப்பட்ட தேவைகளுக்குப் பயன்படுத்தியமை, நாடாளுமன்றத்தில் கட்டணம் செலுத்தாமல் உணவு உட்கொண்டமை, சட்டவிரோதமாக விசாரணை அதிகாரி ஒருவரை நியமித்து, அவருக்கு நாடாளுமன்ற நிதியிலிருந்து ஊதியம் மற்றும் உணவு வழங்கியமை, இரண்டு அதிகாரப்பூர்வ இல்லங்களைத் தவறாகப் பயன்படுத்தியமை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களை வழங்கத் தடையாக இருந்தமை மற்றும் நாடாளுமன்ற நிர்வாகப் பணிகளில் சட்டவிரோதமாகத் தலையிட்டமை ஆகிய குற்றச்சாட்டில் அதில் உள்ளடங்கியுள்ளன.

இதேவேளை, நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவினால் நடத்தப்பட்ட உள்வாரி விசாரணையைத் தொடர்ந்து, சமிந்த குலரத்ன அண்மையில் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

அவர் பிரதி செயலாளர் நாயகமாகப் பதவியேற்கத் தேவையான தகுதிகளைக் கொண்டிருக்கவில்லை என்றும், அவரது நியமன நடைமுறையில் தவறுகள் இருப்பதாகவும் அந்த விசாரணையில் தெரியவந்தது. இதன் பின்னரே, அவர் சபாநாயகருக்கு எதிராக குலரத்ன ஊழல் முறைப்பாட்டை அளித்தார்.

கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு முதற்கட்டமாக இது தொடர்பான ஆவணங்களை நாடாளுமன்றத்திடம் கோரியுள்ளது. ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்ட பின்னர், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன மற்றும் சமிந்த குலரத்ன ஆகியோரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படவுள்ளன.

இதேவேளை, சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளர் இது தொடர்பான அறிக்கையொன்றை நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கோரியுள்ளார். இந்த நடவடிக்கை கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணைகளில் தலையிடுவதாக அமையலாம் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!
செய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!

September 5, 2026
நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
செய்திகள்

நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

September 5, 2026
பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!
செய்திகள்

பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!

September 5, 2026
காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!
செய்திகள்

காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!

September 5, 2026
ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!
செய்திகள்

ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!

September 5, 2026
நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!

September 5, 2026
Next Post
போதைபோருள் விவகாரத்தில் ஸ்ரீ டெலோ கட்சியின் தலைவர் பி.உதயராசா கைது

போதைபோருள் விவகாரத்தில் ஸ்ரீ டெலோ கட்சியின் தலைவர் பி.உதயராசா கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு