திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவை எதிர்வரும் 11ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் இன்று (9) உத்தரவிட்டுள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழு இன்று நீதிமன்றில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 11ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.








