Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வட்ஸ்அப் நிறுவனம் பயனர்களுக்கு வழங்கியுள்ள அப்டேட்

வட்ஸ்அப் நிறுவனம் பயனர்களுக்கு வழங்கியுள்ள அப்டேட்

7 months ago
in செய்திகள், தொழில்நுட்பம்

வட்ஸ்அப் நிறுவனம் தனது இணையத்தளப் பதிப்பான ‘வட்ஸ்அப் வெப்’ (WhatsApp Web) தளத்தில், மென்பொருட்களைத் தரவிறக்கம் செய்யாமலேயே நேரடியாக இணைய உலாவிகள் (Browsers) வழியாக குரல் மற்றும் காணொளி அழைப்புகளை மேற்கொள்ளும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுவரை கணினி செயலிகளில் (Desktop App) மட்டுமே சாத்தியமாக இருந்த இந்த அம்சம், தற்போது பயனர்களுக்கு முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் விண்டோஸ் அல்லது மெக் செயலிகளைப் பயன்படுத்தாத லினக்ஸ் போன்ற இயங்குதளப் பயனர்களும், உலாவிகள் மூலமாகவே தடையின்றி அழைப்புகளை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனிநபர் அரட்டைகளின் மேல் பகுதியில் இதற்கான பிரத்தியேக ஐகன்கள் சேர்க்கப்பட்டுள்ளதுடன், காணொளி அழைப்பின் போது கணினித் திரையைப் பகிரும் (Screen Sharing) வசதியும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பைப் பொறுத்தவரை, அலைபேசி மற்றும் கணினி செயலிகளைப் போலவே இந்த இணைய உலாவி அழைப்புகளும் ‘End-to-End Encryption’ முறையில் முழுமையாகப் பாதுகாக்கப்படுகின்றன.

பயனர்கள் வட்ஸ்அப் வெப் தளத்தில் உள்நுழைந்து செய்து, தமக்குத் தேவையான நபரின் தொடர்பை திறந்து, கெமரா மற்றும் மைக்ரோஃபோன் அனுமதிகளை வழங்குவதன் மூலம் இந்த வசதியைப் பயன்படுத்தலாம்.

தற்போது தனிநபர் அழைப்புகளுக்கு மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த அம்சம், விரைவில் 32 பேர் வரை பங்கேற்கக்கூடிய குழு அழைப்புகளுக்கும் விரிவாக்கப்படவுள்ளதாக வட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், தெரியாத நபர்களிடமிருந்து வரும் அழைப்புகளைத் தடுத்தல் மற்றும் இணைப்புகளின் முன்னோட்டத்தைத் தவிர்த்தல் போன்ற மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களையும் வட்ஸ்அப் அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

90 நாடுகளின் ஊடகவியலாளர்கள் பங்கேற்புடன் ‘CIPCC’ பீஜிங்கில் ஆரம்பம்!
உலக செய்திகள்

90 நாடுகளின் ஊடகவியலாளர்கள் பங்கேற்புடன் ‘CIPCC’ பீஜிங்கில் ஆரம்பம்!

September 5, 2026
மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!
காணொளிகள்

மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!

September 5, 2026
ஈரானுடனான மோதல் எங்களுக்கு சிறிய விடயம்; ட்ரம்ப்!
உலக செய்திகள்

ஈரானுடனான மோதல் எங்களுக்கு சிறிய விடயம்; ட்ரம்ப்!

September 5, 2026
கொழும்பில் இளம் தமிழ் யுவதி கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை; சந்தேகநபரின் சடலமும் மீட்பு!
செய்திகள்

கொழும்பில் இளம் தமிழ் யுவதி கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை; சந்தேகநபரின் சடலமும் மீட்பு!

September 5, 2026
மாட்டைக் காப்பாற்ற முயன்றபோது விபத்து; உழவு இயந்திரம் குளத்தில் கவிழ்ந்து 17 வயது இளைஞர் பலி
செய்திகள்

மாட்டைக் காப்பாற்ற முயன்றபோது விபத்து; உழவு இயந்திரம் குளத்தில் கவிழ்ந்து 17 வயது இளைஞர் பலி

September 5, 2026
மின்வெட்டு குறித்து அச்சம் வேண்டாம்; மின்சார விநியோகத்தில் தடையில்லை என அமைச்சர் அறிவிப்பு!
செய்திகள்

மின்வெட்டு குறித்து அச்சம் வேண்டாம்; மின்சார விநியோகத்தில் தடையில்லை என அமைச்சர் அறிவிப்பு!

September 5, 2026
Next Post
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையுடன் தொடர்புடைய அனைத்து மேலதிக வகுப்புகளும் இன்று நள்ளிரவு முதல் தடை

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையுடன் தொடர்புடைய அனைத்து மேலதிக வகுப்புகளும் இன்று நள்ளிரவு முதல் தடை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு