வடக்கு மக்கள் மீது நம்பிக்கையினையும் நல்ல பாசத்தினையும் ஜனாதிபதி கொண்டுள்ளதன் காரணமாக பெருமளவான அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படுவதாக தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.
கடந்த ஆட்சிக்காலத்தில் இனப்பரம்பலை மாற்றும் சட்ட விரோத குடியேற்றங்கள் முன்னெடுக்கப்பட்டபோதிலும் தமது ஆட்சிக்காலத்தில் அவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படாது எனவும் அவர் தெரிவித்தார்.
வெல்லாவெளியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.








