Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வங்காள விரிகுடாவில் உருவாகும் காற்றுச் சுழற்சி; வடகிழக்கில் மீண்டும் கனமழை!

வங்காள விரிகுடாவில் உருவாகும் காற்றுச் சுழற்சி; வடகிழக்கில் மீண்டும் கனமழை!

5 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கு திசையில் இன்று இரவு உருவாகும் வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக நாளை முதல் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளில் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது என யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியற்றுறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள பதிவில் மேலும் குறிப்பிடுகையில்,

இன்று இரவு (11.02.2026) வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கு திசையில் உருவாகும் வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக நாளை (12.02.2026) முதல் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை வடக்கு, கிழக்கு, மத்திய, ஊவா, மேற்கு, வட மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் சற்றுக் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

குறிப்பாக நாளை இரவு யாழ்ப்பாண மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் சற்று கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

அதேவேளை நாளை மறுதினம் கிழக்கு, மத்திய, மேல், வடமத்திய மற்றும் தென் மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் பரவலாக கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

மீளவும் எதிர்வரும் 16ம் திகதியளவில் வங்காள விரிகுடாவில் மீண்டும் ஒரு காற்றுச் சுழற்சி உருவாகும் வாய்ப்புள்ளது.

இதனால் மீண்டும் 16 ம் திகதி முதல் 19 ம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

அதேவேளை இலங்கைக்கு அதிக மழை கிடைக்க காரணமாக விளங்குகின்ற மேடன் ஜுலியன் அலைவானது (MJO) எதிர்வரும் நாட்களில் வங்காள விரிகுடாக் கடற்பகுதிக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதனால் எதிர்வரும் பெப்ரவரி மாதத்தின் இறுதி நாட்களிலும் மார்ச் மாதத்தின் ஆரம்ப நாட்களிலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளில் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. எனினும் இதனை அடுத்த சில நாட்களிலேயே உறுதிப்படுத்த முடியும்.

எனவே இந்த நாட்களைக் கருத்தில் கொண்டு விவசாயிகள் தங்கள் அறுவடை மற்றும் அறுவடைக்கு பின்னான செயற்பாடுகளை மேற்கொள்வது சிறந்தது என தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சை விண்ணப்பத் தகவல் திருத்தம்; ஓகஸ்ட் 3 வரை அவகாசம்
செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சை விண்ணப்பத் தகவல் திருத்தம்; ஓகஸ்ட் 3 வரை அவகாசம்

July 23, 2026
மத்திய கிழக்கு பதற்றம் எதிரொலி; கச்சா எண்ணெய் விலை 100 டொலரைக் கடந்தது!
செய்திகள்

மத்திய கிழக்கு பதற்றம் எதிரொலி; கச்சா எண்ணெய் விலை 100 டொலரைக் கடந்தது!

July 23, 2026
உயிர்த்த ஞாயிறு வழக்கு; கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு ஓகஸ்ட் 3 வரை ஒத்திவைப்பு!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு வழக்கு; கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு ஓகஸ்ட் 3 வரை ஒத்திவைப்பு!

July 23, 2026
வானில் பறக்கும் அதானியின் கனவு; புதிய விமான நிறுவனம் குறித்து ஆலோசனை!
செய்திகள்

வானில் பறக்கும் அதானியின் கனவு; புதிய விமான நிறுவனம் குறித்து ஆலோசனை!

July 23, 2026
சாந்த பண்டாரவின் மகனுக்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்
செய்திகள்

சாந்த பண்டாரவின் மகனுக்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்

July 23, 2026
அமெரிக்கா–சவூதியிடையே அணுசக்தி ஒப்பந்தம்
உலக செய்திகள்

அமெரிக்கா–சவூதியிடையே அணுசக்தி ஒப்பந்தம்

July 23, 2026
Next Post
வீதியில் கிடந்த பலாப்பழத்தால் ஏற்பட்ட விபத்து; 2 வயது குழந்தை உயிரிழப்பு – மனவேதனையில் தந்தை எடுத்த விபரீத முடிவு

வீதியில் கிடந்த பலாப்பழத்தால் ஏற்பட்ட விபத்து; 2 வயது குழந்தை உயிரிழப்பு - மனவேதனையில் தந்தை எடுத்த விபரீத முடிவு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.