Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கொழும்பு உணவகமொன்றில் பரபரப்பு!; உணவுக்குள் அவிந்து கிடந்த பாம்பு குட்டி?

கொழும்பு உணவகமொன்றில் பரபரப்பு!; உணவுக்குள் அவிந்து கிடந்த பாம்பு குட்டி?

7 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கொழும்பு, பம்பலப்பிட்டியிலுள்ள பிரபல பிலவூஸ் உணவகத்தில் பரிமாறப்பட்ட உணவில் பாம்பு குட்டி ஒன்று இருந்ததாக கூறப்படும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று (12) காலை குறித்த உணவகத்தில் உணவு உட்கொண்ட போது, உணவில் பாம்பு குட்டி போன்ற ஒரு தலைப் பகுதி காணப்பட்டுள்ளதாக நபர் ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

எனினும் இந்த குற்றச்சாட்டை உணவக நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. எமது தரப்பிலிருந்து இவ்வாறான ஒரு தவறு நடக்க வாய்ப்பே இல்லை என உணவக முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், “சம்பவம் தொடர்பில் தகவல் வெளியானவுடன் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் உணவகத்திற்கு வந்து சோதனைகளை மேற்கொண்டனர்.

குறித்த வீடியோவை வெளியிட்டவர் ஒரு சமூக வலைத்தள பிரபலம் எனவும் லைக்ஸ் மற்றும் வியூஸ்களுக்காக திட்டமிட்டு இவ்வாறான செயலைச் செய்திருக்கலாம்” என வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வமாக முறைப்பாடுகள் எதுவும் கிடைக்கவில்லை. எனினும் வீடியோவின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதென கொழும்பு மாநகர சபையின் பிரதம மருத்துவ அதிகாரி கே. ஸ்ரீபிரதாபன் தெரிவித்துள்ளார்.

உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். சுகாதாரச் சீர்கேடுகள் கண்டறியப்பட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை
செய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை

September 7, 2026
யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு
செய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு

September 7, 2026
நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
Next Post
தமிழர் பகுதியில் கெப் ரக வாகனம் மீது பொலிசார் துப்பாக்கிப் பிரயோகம்; பதிவான மற்றுமொரு சம்பவம்

தமிழர் பகுதியில் கெப் ரக வாகனம் மீது பொலிசார் துப்பாக்கிப் பிரயோகம்; பதிவான மற்றுமொரு சம்பவம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு