Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜப்பானில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு காஷிவாசாகி-கரிவா அணுமின் நிலையம் மீண்டும் இயக்கம்

ஜப்பானில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு காஷிவாசாகி-கரிவா அணுமின் நிலையம் மீண்டும் இயக்கம்

7 months ago
in உலக செய்திகள், செய்திகள்

ஜப்பானின் டோக்கியோ மின்சக்தி நிறுவனம் (TEPCO), உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையமான காஷிவாசாகி-கரிவா நிலையத்தில் சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மின் உற்பத்தியைத் தொடங்கியுள்ளது.

2011ஆம் ஆண்டு ஏற்பட்ட புகுஷிமா அணு உலை விபத்திற்குப் பிறகு, பாதுகாப்பு காரணங்களுக்காக ஜப்பானின் பெரும்பாலான அணுமின் நிலையங்கள் மூடப்பட்டன.

இந்தநிலையில், நிகாட்டா மாகாணத்தில் உள்ள காஷிவாசாகி-கரிவா அணுமின் நிலையத்தின் 6ஆவது அணு உலை (Reactor No. 6), நேற்றையதினம் (16) முதல் சோதனை அடிப்படையில் மின் உற்பத்தியைத் தொடங்கியுள்ளது.

இந்த உலை கடைசியாக 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் மின்சாரத்தை விநியோகித்தமை குறிப்பிடத்தக்கது. நேற்று முன்தினம் மாலை அணு உலையின் டர்பைன்கள் இயக்கப்பட்டு, நேற்று முதல் மின்சாரம் கடத்தப்படும் பணிகள் (Transmission) ஆரம்பமாகின.

இந்த அணு உலை கடந்த ஜனவரி 21ஆம் திகதியே மீண்டும் இயக்கப்பட்டது. இருப்பினும், ‘கட்டுப்பாட்டு தண்டுகள்’ (Control rods) மற்றும் ‘நியூட்ரோன் அளவிடும் கருவி’ ஆகியவற்றில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

தற்போது 20% உற்பத்தியுடன் தொடங்கப்பட்டுள்ள இந்தப் பணி, படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வரும் மார்ச் 18 அன்று முழு அளவிலான வணிக ரீதியான மின் விநியோகத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜப்பான் அரசு தனது கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும் (Decarbonization) கொள்கையின் ஒரு பகுதியாக, கடுமையான பாதுகாப்புத் தரங்களை எட்டும் அணு உலைகளை மீண்டும் இயக்கத் தீர்மானித்துள்ளது.

இயற்கை எரிவாயு இறக்குமதியைக் குறைக்கவும், நாட்டின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், புகுஷிமா விபத்தின் வடுக்கள் இன்னும் மறையாத நிலையில், இப்பகுதி மக்களிடையே இந்த மறுதொடக்கத்திற்கு சுமார் 60% வரை எதிர்ப்பு நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!
செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!

September 15, 2026
மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்
காணொளிகள்

மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்

September 15, 2026
கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு நீதிமன்ற அழைப்பாணை
செய்திகள்

கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு நீதிமன்ற அழைப்பாணை

September 15, 2026
மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்!
செய்திகள்

மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்!

September 15, 2026
அர்ச்சுனா இராமநாதனின் ஒத்துழைப்புடன் வடகிழக்கில் அரசியல் அதிகாரம் கைப்பற்றப்படும்; மொட்டு
செய்திகள்

அர்ச்சுனா இராமநாதனின் ஒத்துழைப்புடன் வடகிழக்கில் அரசியல் அதிகாரம் கைப்பற்றப்படும்; மொட்டு

September 15, 2026
காதலி இலங்கையில்..காதலன் இந்தியாவில்!; பேஸ்புக் காதலுக்காக கடல் கடந்த 17 வயது சிறுவன் மன்னாரில் கைது!
செய்திகள்

காதலி இலங்கையில்..காதலன் இந்தியாவில்!; பேஸ்புக் காதலுக்காக கடல் கடந்த 17 வயது சிறுவன் மன்னாரில் கைது!

September 15, 2026
Next Post
முன்னாள் அமைச்சர் விஜித் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜர்

முன்னாள் அமைச்சர் விஜித் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு