Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மக்கள் குரல் அமைப்பின் தலைவர்களுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பு

மக்கள் குரல் அமைப்பின் தலைவர்களுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பு

4 months ago
in செய்திகள்

மக்கள் குரல் அமைப்பின் தலைவர்களுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு நேற்று (18) புதன்கிழமை பத்தரமுல்லையிலுள்ள ‘நெலும் மாவத்தை’ கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது.

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து இந்தச் சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் அதன் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, பொதுச்செயலாளர் சாகர காரியவசம், பாராளுமன்ற உறுப்பினர்களான சி.பி. ரத்நாயக்க மற்றும் சஞ்சீவ எதிரிமான்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.

மக்கள் குரல் அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தி பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் மகிந்த அமரவீர, பொதுஜன ஐக்கிய முன்னணியின் தலைவர் அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் ஐக்கிய மக்கள் கட்சியின் தலைவர் டிரான் அலஸ் உட்பட பல தலைவர்கள் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர்.

பேராசிரியர் ஜி.எல். பீரிஸின் ஒருங்கிணைப்பில் இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பேராசிரியர் பீரிஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் அண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவையும் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் நவம்பர் மாதம் 21ஆம் திகதி நுகேகொடையில் ‘மகா மக்கள் குரல்’ என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்ட பிரம்மாண்ட பேரணியைத் தொடர்ந்து, தற்போது கட்சித் தலைமையகத்தில் இந்த முக்கிய சந்திப்பு இடம்பெற்றுள்ளமை அரசியல் களத்தில் விசேட கவனத்தைப் பெற்றுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

காற்றின் வேகம் அதிகரிக்கும்; கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை
செய்திகள்

காற்றின் வேகம் அதிகரிக்கும்; கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை

June 9, 2026
முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு ஊழல் விவகாரத்தில் நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை
செய்திகள்

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு ஊழல் விவகாரத்தில் நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

June 9, 2026
பிரபு ஒரு தமிழர் என்ற இனவெறிப் போக்கே ஹிஸ்புல்லாவின் இந்த தாக்குதல் முயற்சி; அந்தனிசில் ராஜ்குமார்
காணொளிகள்

பிரபு ஒரு தமிழர் என்ற இனவெறிப் போக்கே ஹிஸ்புல்லாவின் இந்த தாக்குதல் முயற்சி; அந்தனிசில் ராஜ்குமார்

June 9, 2026
மாகாண சபைத் தேர்தல் நடத்தினால் 8 மாகாணங்களில் பொதுஜன பெரமுன ஆட்சியமைக்கும்; சாந்த பண்டார!
செய்திகள்

மாகாண சபைத் தேர்தல் நடத்தினால் 8 மாகாணங்களில் பொதுஜன பெரமுன ஆட்சியமைக்கும்; சாந்த பண்டார!

June 9, 2026
நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்கும் வரை ஓயமாட்டோம்; சத்தாதிஸ்ஸ தேரர்!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்கும் வரை ஓயமாட்டோம்; சத்தாதிஸ்ஸ தேரர்!

June 9, 2026
அடுத்த இரு வாரங்களில் ஈரானுக்கு எதிராக முழுமையான வெற்றி; ட்ரம்ப் அறிவிப்பு
உலக செய்திகள்

அடுத்த இரு வாரங்களில் ஈரானுக்கு எதிராக முழுமையான வெற்றி; ட்ரம்ப் அறிவிப்பு

June 9, 2026
Next Post
நோன்பு காலத்தை முன்னிட்டு சாய்ந்தமருதில் விசேட சுகாதார பரிசோதனைகள்

நோன்பு காலத்தை முன்னிட்டு சாய்ந்தமருதில் விசேட சுகாதார பரிசோதனைகள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு