ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி மீண்டும் மிகப்பெரிய சர்ச்சை ஒன்றுக்குள் சிக்கிருக்கிறது. பாகிஸ்தான் அணியையும் சூதாட்டப் புகாரையும் பிரிப்பது என்பது முடியவே முடியாத காரியம்.
ஏனெனில் அந்த அணியின் பலவீரர்கள் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டு சிக்கி தங்களுடைய கிரிக்கெட் வாழ்க்கையை இழந்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் இலங்கையில் நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி நிர்வாகிகள் செய்த காரியம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இலங்கையில் நடைபெறும் போட்டியை காண்பதற்காக பாகிஸ்தானில் இருந்து அந்நாட்டு கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் 20 பேர் கொழும்பு வந்திருக்கிறார்கள். இந்த நிலையில் ஐசிசி விதியின்படி கிரிக்கெட் போட்டியில் பங்கு பெற உள்ள நிர்வாகிகள் வீரர்கள் யாரும் காசினோ எனப்படும் சூதாட்ட விடுதிக்கு செல்லக்கூடாது.
ஏனெனில் கிரிக்கெட் போட்டிகளை மேட்ச் பிக்சிங் செய்யும் நபர்கள் அனைவரும் இந்த கிளப்பில் தான் அமர்ந்து கொண்டு திட்டத்தை தீட்டுவார்கள். இதனால் இது போன்ற இடங்களுக்கு செல்வது ஐசிசி விதிப்படி குற்றமாகும். இந்த நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த ஊடக மேலாளர் உமர் பாரூக் மற்றும் மேலாளர் அத்னான் அலி கொழும்புவில் உள்ள பிரபல சூதாட்ட விடுதிக்கு சென்று இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் சூதாட்ட விடுதியில் இருந்தது குறித்தான வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இது பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய தலைகுனிவு ஏற்படுத்தியிருக்கிறது. இதனை அடுத்து பாகிஸ்தான் அணி மீது விசாரணை நடத்த வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் சூதாட்டம் விடுதிக்கு சென்ற பாகிஸ்தான் அணி நிர்வாகிகள் என்ன செய்தார்கள்? யாருடனும் பேசினார்கள் என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஏற்கனவே பாகிஸ்தானுக்கு பிறகு இலங்கையை தான் சூதாட்ட கும்பல் குறி வைத்து தொடர்ந்து ஈடுபட்டு இருக்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணி நிர்வாகிகள் சூதாட்ட விடுதிக்கு சென்று இருப்பதால் ஏதேனும் மேட்ச் பிக்சிங் அல்லது ஸ்பாட் பிக்சிங் ஆகியவை நடந்திருக்குமோ என்ற அச்சம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.இது தொடர்பாக விசாரணை நடத்த ஐசிசி முடிவு எடுத்திருக்கிறது.
அதேசமயம் நேற்று மழைகாரணமாக இடைநிறுத்தப்பட்ட இந்தியா, பாகிஸ்தானுக்குமிடையிலான போட்டியானது இன்று பிற்பகல் 3.00 மணிக்கு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.