Google நம்மிடம் I’m not a robot என கிளிக் செய்யுமாறு பல முறை கேட்டிருக்கும், நாமும் அதை கிளிக் செய்துவிட்டு உடனே அடுத்த வேலையை பார்ப்போம். ஆனால், அதன் பின்னால் இருக்கும் காரணம் தெரியுமா?
நாம் Google மூலம் தேடும் போதோ அல்லது ஏதேனும் செயலியைப் பயன்படுத்த முயற்சிக்கும் போதோ, “நீங்கள் ரோபோ இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்” என்று ஒரு திரை தோன்றும். இது உங்களுக்கு பல புகைப்படங்களைக் காண்பிக்கும் மற்றும் ஒரு குறிப்பிட்ட பொருளைக் கண்டுபிடிக்கும்படி கேட்கும்.
அந்த பொருளையும் நாம் கண்டுபிடிப்போம். சில நேரங்களில் ஒரு சிறிய பாக்ஸை நீங்கள் கிளிக் செய்ய வேண்டும்.
அதில் நான் ரோபோ இல்லை என்பதை உறுதி செய்த பிறகே இணையதளத்திற்குள் அனுமதிக்கப்படுகிறோம்.
கூகுள் ஏன் இந்தக் கேள்வியைக் கேட்கிறது என்று பல நேரங்களில் நாம் எரிச்சலடைகிறோம். ஆனால் அதற்கான காரணத்தை நாம் ஆராய்ந்ததில்லை.
சைபர் பாதுகாப்பு நிறுவனம் கூறுகையில், திரையில் தோன்றும் கேப்ட்சா மூலம் நமது மவுஸ் கர்சர் இயக்கம் கண்காணிக்கப்படுகிறது. ரோபோக்கள் இந்த பணியை துல்லியமாக செய்ய முடியும்.
ஆனால் மனிதர்கள் மவுஸை நகர்த்தும்போது, ஒரு சீரற்ற தன்மை உணரப்படுகிறது. இதன் மூலம் நாம் மனிதரா அல்லது ரோபோதானா என்பதை கூகுள் அறிந்து கொள்ளும்.
இதை கிளிக் செய்யும் போது, இணையதளம் நமது முந்தைய தேடல்களை ஆராய்ந்து அது மனிதர் என்பதை உறுதிப்படுத்தும்.
இணையதளங்கள் ஒரு குறிப்பிட்ட அல்காரிதம் மூலம் இயக்கப்படுகின்றன. எனவே சில நேரங்களில் இந்த கேப்ட்சா பாதிக்கப்பட்ட கணினிகளால் செயல்படுத்தப்படலாம் மற்றும் சில நேரங்களில் இந்த தேடல்கள் ஸ்பேமாக கூட இருக்கலாம். பாதுகாப்புச் சிக்கல்கள் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்வதற்காக இது செய்யப்படுகிறது.
மேலும், பயனர்களுக்கு எளிதான, துல்லியமான தகவல்களை வழங்குவதற்காக, நம் கடந்த கால மற்றும் தற்போதைய தேடல்களைப் படிப்பதன் மூலம் தன்னை மேம்படுத்திக்கொள்ள Google இந்த முறையைப் பயன்படுத்துகிறது.