Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சந்தேகநபர் தப்பியோட்டம்; மூன்று பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம்

சந்தேகநபர் தப்பியோட்டம்; மூன்று பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம்

8 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு கல்கிசை தலைமையக பொலிஸ் நிலையத்தில் இருந்த போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய பெண் சந்தேகநபர், தப்பியோடிய சம்பவம் தொடர்பில் இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள் மற்றும் ஒரு பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இரவு நேரப் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய மற்றும் உதவிப் பணியாளராகக் கடமையாற்றிய இரண்டு சார்ஜன்ட்களும், சந்தேக நபரின் பாதுகாப்புக்காக அமர்த்தப்பட்டிருந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிளுமே இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

குறித்த பெண் சந்தேகநபர் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையதாக, கடந்த சில நாட்களுக்கு முன்னர் மொரட்டுவை விசேட அதிரடிப்படை முகாமின் விசேட நடவடிக்கைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

ரத்மலானை மெலிபன் சந்தி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட அவரிடமிருந்து 36,650 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டிருந்தது.

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் கல்கிசை பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த குறித்த சந்தேக நபர், கடந்த 16ஆம் திகதி தனது இயற்கை உபாதையைத் தீர்க்க வேண்டும் எனக் கூறி பெண் கான்ஸ்டபிளுடன் கழிவறைக்குச் சென்றபோது, அங்கிருந்து தப்பிச் சென்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றில் ஏறித் தப்பியோடியுள்ளார்.

எவ்வாறாயினும், தப்பியோடிய சந்தேக நபர் 8 மணித்தியாலங்களுக்குப் பிறகு அன்றைய தினமே தலவத்துகொட கிம்புலாஎல பகுதியில் வைத்து விசேட பொலிஸ் குழுவினரால் மீண்டும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஆங்கிலக் கவிதை கூறல் போட்டியில் மாகாண மட்டத்தில் இரண்டாம் இடம்; தேசிய மட்டத்திற்குத் தெரிவான கோட்டைக் கல்லாறு மாணவி!
செய்திகள்

ஆங்கிலக் கவிதை கூறல் போட்டியில் மாகாண மட்டத்தில் இரண்டாம் இடம்; தேசிய மட்டத்திற்குத் தெரிவான கோட்டைக் கல்லாறு மாணவி!

October 20, 2026
கண்டியின் பல பகுதிகளில் 42 மணிநேரம் நீர் விநியோகம் தடை!
செய்திகள்

கண்டியின் பல பகுதிகளில் 42 மணிநேரம் நீர் விநியோகம் தடை!

October 20, 2026
வெளிநாடுகளில் இருந்து வந்த 11 தபால் பொதிகளில் போதைப்பொருட்கள் மீட்பு!
செய்திகள்

வெளிநாடுகளில் இருந்து வந்த 11 தபால் பொதிகளில் போதைப்பொருட்கள் மீட்பு!

October 20, 2026
திருகோணமலை இரட்டைக் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்; ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரிகள் மூவர் கைது!
செய்திகள்

திருகோணமலை இரட்டைக் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்; ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரிகள் மூவர் கைது!

October 20, 2026
பிரான்சில் கலவரம்; 2,400 பேர் கைது – பல பகுதிகளில் ஊரடங்கு!
உலக செய்திகள்

பிரான்சில் கலவரம்; 2,400 பேர் கைது – பல பகுதிகளில் ஊரடங்கு!

October 20, 2026
ஐக்கிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேச சபைக்கு அதிர்ச்சி; அனைத்து செயற்பாடுகளையும் இடைநிறுத்திய ஆளுநர்!
செய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேச சபைக்கு அதிர்ச்சி; அனைத்து செயற்பாடுகளையும் இடைநிறுத்திய ஆளுநர்!

October 20, 2026
Next Post
குற்றவாளிகளுக்கு வீட்டுக்காவல்;இலங்கையிலும் வருகிறது வெளிநாட்டு நடைமுறை

குற்றவாளிகளுக்கு வீட்டுக்காவல்;இலங்கையிலும் வருகிறது வெளிநாட்டு நடைமுறை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு