Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
3 இலட்சம் எரிவாயு கொள்கலன்கள் விநியோகம் ஆரம்பம்

3 இலட்சம் எரிவாயு கொள்கலன்கள் விநியோகம் ஆரம்பம்

7 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சந்தைக்கு 3 லட்சம் சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் பணிகள் இன்று (23) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

3,900 மெட்ரிக் டன் எரிவாயுவை தாங்கிய கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், அதனைத் தரையிறக்கும் பணிகள் நேற்றே ஆரம்பிக்கப்பட்டன.

மேலும் இரண்டு எரிவாயு கப்பல்கள் எதிர்வரும் 25 மற்றும் 28ஆம் திகதிகளில் நாட்டை வந்தடையவுள்ளன.

இந்நிலையில் இன்று முதல் நாளொன்றுக்கு ஒரு இலட்சம் எரிவாயு கொள்கலன்கள் சந்தைக்கு விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் தற்போது நிலவும் தட்டுப்பாடு படிப்படியாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போதிய கையிருப்பைப் பேணுவதற்காகப் புதிய கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. பெப்ரவரி மாதம் நிறைவடைவதற்குள் அந்த எரிவாயு கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளன.

அதேநேரம் எதிர்வரும் மார்ச் மாதம் 12ஆம் திகதி முதல் அதிகளவிலான லிட்ரோ எரிவாயு கொள்கலன்களை சந்தைக்கு விநியோகிக்க எதிர்பார்ப்பதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க அண்மையில் தெரிவித்திருந்தார்.

கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளில் லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியிருந்ததுடன், பல இடங்களில் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருப்பதையும் காணக்கூடியதாக இருந்தது.

எரிவாயு விநியோகிக்கப்படும் திகதி குறித்து தமக்குச் சரியான தகவல் வழங்கப்படவில்லை என வர்த்தகர்களும் தெரிவித்திருந்தனர்.

எவ்வாறாயினும், 3 இலட்சம் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், சந்தையில் நிலவும் நெருக்கடி நிலை விரைவில் சீராகும் என லிட்ரோ நிறுவனம் உறுதியளித்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு
அரசியல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு

September 15, 2026
பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்
செய்திகள்

பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

September 15, 2026
மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்
செய்திகள்

மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்

September 15, 2026
அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!
செய்திகள்

அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!

September 15, 2026
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!
செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!

September 15, 2026
மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்
காணொளிகள்

மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்

September 15, 2026
Next Post
முச்சக்கரவண்டி சாரதி கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது

முச்சக்கரவண்டி சாரதி கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு