Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வவுனியாவில் பல்பொருள் அங்காடிக்குள் கத்தி குத்து; பெண் ஒருவர் கைது

வவுனியாவில் பல்பொருள் அங்காடிக்குள் கத்தி குத்து; பெண் ஒருவர் கைது

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வவுனியா – பண்டாரிக்குளம் பகுதியில் பல்பொருள் அங்காடி ஒன்றுக்குள் புகுந்து பெண் ஒருவர் மீது கத்தி குத்து மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், குறித்த சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, பண்டாரிக்குளம் முனியப்பர் கோயில் வீதியில் உள்ள அடுக்குமாடி வளவுக்குள் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் நேற்று முன்தினம் (23) இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கத்தி குத்துச் சம்பவம் தொடர்பில் கடை உரிமையாளர் , வவுனியா தலைமை பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவில் செய்த முறைப்பாட்டுக்கமைய, வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.எஸ்.வீரரத்தின அவர்களின் வழிகாட்டலில், வவுனியா பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி இலங்கசிங்க தலைமையிலான குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு துரிதமாகச் செயல்பட்டு கத்தி குத்தை மேற்கொண்ட பெண்ணை உடனடியாக கைது செய்தனர்.

இதன்போது கூமாங்குளம் பகுதியில் வசிக்கும் 50 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அடிப்படையில்,

அடுக்குமாடிக் குடியிருப்பில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக துப்பரவு வேலை செய்து வந்ததாகவும் அங்கு வாடகை அடிப்படையில் தங்கியிருந்த 64 வயதுடைய பெண் ஒருவருக்கும் அங்கு துப்பரவு பணி வேலை செய்துவரும் குறித்த சந்தேக நபருக்கும் இடையில் கடந்த சில நாட்களாக ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக சந்தேக நபரை அடுக்குமாடிக் குடியிருப்பின் உரிமையாளர் வேலையில் இருந்து நிறுத்தியுள்ளார்.

இவ் முரண்பாடு காரணமாகவே வேலையால் நிறுத்தப்பட்ட பெண்ணால் குறித்த கத்திக் குத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்
செய்திகள்

குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்

June 7, 2026
பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு
செய்திகள்

பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு

June 7, 2026
காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
செய்திகள்

காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

June 7, 2026
பாடகர் கைது செய்யப்பட்டிருப்பது தோல்வியடைந்த அரசியல்வாதிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம்; இளங்குமரன்
செய்திகள்

பாடகர் கைது செய்யப்பட்டிருப்பது தோல்வியடைந்த அரசியல்வாதிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம்; இளங்குமரன்

June 7, 2026
சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பிக்குவுக்கு 24 ஆண்டுகள் கடுழியச் சிறைத்தண்டனை
செய்திகள்

சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பிக்குவுக்கு 24 ஆண்டுகள் கடுழியச் சிறைத்தண்டனை

June 7, 2026
தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த 5 உறுப்பினர்களை பதவி நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி
அரசியல்

தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த 5 உறுப்பினர்களை பதவி நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி

June 7, 2026
Next Post
உலக பௌத்த சங்க 60வது ஆண்டு விழா இலங்கையில்

உலக பௌத்த சங்க 60வது ஆண்டு விழா இலங்கையில்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு