Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு திராய்மடு, பாலமீன்மடு பிரதேசத்தில் மாடு திருடர்களை பிடித்துத்தந்தால் 25 ஆயிரம் ரூபா சன்மானம்

மட்டு திராய்மடு, பாலமீன்மடு பிரதேசத்தில் மாடு திருடர்களை பிடித்துத்தந்தால் 25 ஆயிரம் ரூபா சன்மானம்

6 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு திராய்மடு மற்றும் பாலைமீன்மடு பகுதிகளில் கால்நடை வளர்ப்பாளர்களின் மாட்டுபட்டிகளில் உள்ள 40 மாடுகளை இதுவரை திருடர்கள் திருடிச் சென்று இறைச்சியாக்கியுள்ளனர் எனவே இத் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபடுபவர்களை பிடித்து தருபவர்களுக்கு 25 ஆயிரம் ரூபா சன்மானமாக வழங்கப்படும் என பொதுமக்களிடம் பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

மட்டக்களப்பு வொய்ஸ் ஒப் மீடியா நிறுவகத்தில் இன்று (26) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கால்நடைவளர்ப்பு பண்ணையாளரும், வர்த்தகருமான ஈ.பி.டி.பியின் மட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான அந்தனிசில் ராஜ்குமார் கலந்து கொண்டு இவ்வாறு தெரிவித்தார்

குறித்த பிரதேசங்களில் பதிவு செய்யப்பட்ட 15 பேருக்கு மேற்பட்ட கால் நடை வளர்ப்பாளர் மாடு மற்றும் ஆடுகளை ஜீவனோபாய தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் குறித்த பகுதிகளில் நள்ளிரவில் சொகுசு வாகனங்களான கே.டி.எச். ரக வான், மூடிய பட்டா ரக லொறி, கார் போன்ற வாகனங்களின் திருடர்கள் மாடுகள் ஆடுகளை திருடிச் சென்று ஏறாவூர் பகுதிகளுக்கு கொண்டு சென்று அதனை வெட்டி இறைச்சியாக்கி வருகின்றனர்.

இந்த மாடுகள் திருட்டு தொடர்பாக கொக்குவில் பொலிசாரிடம் பல முறைப்பாடு செய்திருந்த போதும் இந்த திருட்டுக் கும்பலை இதுவரை கைது செய்யவில்லை. அதேவேளை கடந்த இரண்டு வருடத்திற்கு முன்னர் 4 மாடுகள் திருட்டுப் போன நிலையில், ஏறாவூர் பகுதியில் மாடு அறுக்கும் இடத்திலிருந்து ஒரு மாட்டை இறைச்சிக்காக வெட்டிய நிலையிலும், 3 மாடுகளை உயிருடன் மீட்டதுடன் ஒருவரை கைது செய்து நீதிமன்றில் வழக்கு இடம்பெற்றுவருகின்றது .

அதேவேளை கடந்த சுதந்திர தினத்திற்கு முன்தினமான 3ம் திகதி இரவு பட்டியில் இருந்த கன்றுதாச்சியான பசுமாடு உட்பட 4 மாடுகள் திருட்டுப் போயுள்ளது. இவ்வாறு நாளாந்தம் தொடர்ச்சியாக எங்களது மாடுகள் திருட்டுப் போகின்றது.

இவ்வாறு மாடுகள் திருடப்படுவதால் கால்நடைவளர்ப்பு மேற்கொள்ளமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம் இந்த மாடுகளை திருட்டில் ஈடுபடுவர்களை கண்டால் அவர்களை பிடித்து தருபவர்களுக்கு சன்மானமாக 25 ஆயிரம் ரூபா பணம் வழங்கப்படும் என பாதிக்கப்பட்ட பண்ணையாளர்கள் அறிவித்தனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தல்பொத்தவில் சட்டவிரோத அகழ்வாராய்ச்சி;  ஐவர் கைது
செய்திகள்

தல்பொத்தவில் சட்டவிரோத அகழ்வாராய்ச்சி; ஐவர் கைது

September 7, 2026
தாய்லாந்து விசா விலக்குத் திட்டத்தில் இருந்து இலங்கை உட்பட 21 நாடுகள் நீக்கம்!
செய்திகள்

தாய்லாந்து விசா விலக்குத் திட்டத்தில் இருந்து இலங்கை உட்பட 21 நாடுகள் நீக்கம்!

September 7, 2026
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு கார் விபத்து; பெண் ஒருவருக்கு காயம்!
செய்திகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு கார் விபத்து; பெண் ஒருவருக்கு காயம்!

September 7, 2026
பங்களாதேஷை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை மகளிர் அணி!
செய்திகள்

பங்களாதேஷை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை மகளிர் அணி!

September 7, 2026
ஜெனிவாவில் இலங்கை தொடர்பான அறிக்கை இன்று!
செய்திகள்

ஜெனிவாவில் இலங்கை தொடர்பான அறிக்கை இன்று!

September 7, 2026
கப்பல் வழியாக இந்தியா சென்ற 13 பேர் சந்தேகத்தில் கைது!
செய்திகள்

கப்பல் வழியாக இந்தியா சென்ற 13 பேர் சந்தேகத்தில் கைது!

September 7, 2026
Next Post
மட்டக்களப்பில் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக வெடிக்கவுள்ள போராட்டம்; தாயக செயலணி அழைப்பு

மட்டக்களப்பில் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக வெடிக்கவுள்ள போராட்டம்; தாயக செயலணி அழைப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.