Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வவுனியா செட்டிகுளத்தில் கள்ளுத்தவறணைக்கு சீல்; சட்டவிரோத மதுபானங்கள் விற்றதாக குற்றச்சாட்டு

வவுனியா செட்டிகுளத்தில் கள்ளுத்தவறணைக்கு சீல்; சட்டவிரோத மதுபானங்கள் விற்றதாக குற்றச்சாட்டு

7 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வவுனியா செட்டிகுளம் பிரதேச சபை – பெரியதம்பனை கள்ளுத்தவறணை தொடர்பாக
நேற்றையதினம் (26.02.2026), செட்டிகுளம் பிரதேச சபையின் கௌரவ. உப தவிசாளர் அவர்களின் முன்னிலையில், பெரியதம்பனை பகுதியில் செயல்பட்டு வந்த கள்ளுத்தவறணை மீது சிவப்பு அறிவித்தல் ஒட்டப்பட்டு, பகிரங்கமாக சீல் வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இக் கள்ளுத்தவறணை தொடர்பாக, வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலகம் வழங்கிய VCKPS/2025/12/6/66 (23.12.2025) ஆம் இலக்க தீர்மானத்தின் படி, 2026 ஆம் ஆண்டிற்காக சீவல் கள்ளு (Toddy) மட்டும் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது. எனினும், பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்புகளிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில், குறித்த நிலையத்தில் போத்தல் கள்ளு மற்றும் சட்டவிரோத மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, 29.01.2026 அன்று பிரதேச செயலாளர் அவர்களால் அனுப்பப்பட்ட கடிதத்தின் மூலம், வழங்கப்பட்டிருந்த 2026 ஆம் ஆண்டிற்கான அனுமதி இரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மேலும், 1987 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் பிரகாரம், அனுமதியின்றி இந்நிலையம் இயங்கினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையம் தொடர்ந்து சட்டவிரோதமாக திறந்து விற்பனை மேற்கொண்டு வந்ததால், பகுதி மக்கள், பாடசாலை சமூகத்தினர், கௌரவ. பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இதனை உடனடியாக மூடுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

குறிப்பாக, மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் நலன் பாதிக்கப்படுவதாகவும், சமூக ஒழுங்கு சீர்குலைவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில், மக்களின் கோரிக்கையையும், சட்டரீதியான ஆவணங்களையும் கருத்தில் கொண்டு,
கௌரவ. தவிசாளர் அவர்களின் ஒத்துழைப்புடன் ,வருமான வரி பரிசோதகர் திரு. மயூரன் மற்றும் கௌரவ.உறுப்பினர் சணோஜன் அவர்களின் பங்குபற்றலுடன் நேற்றையதினம் தினம் குறித்த கள்ளுத்தவறணை சீல் வைக்கப்பட்டது.

சிவப்பு அறிவித்தலை சேதப்படுத்துதல் அல்லது மீறி மீண்டும் திறந்து விற்பனை செய்தல் போன்ற செயல்கள் மேற்கொள்ளப்பட்டால், 1987 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். செட்டிகுளம் பிரதேச சபை, எப்போதும் மக்களின் நலன் மற்றும் சமூக ஒழுங்கை முன்னிறுத்தி செயல்படும் என்பதை இத்தருணத்தில் மீண்டும் வலியுறுத்துகிறோம் எனவும் ஊடக சுட்டிக்காட்டப்பட்டது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக வெளியான செய்திகளுக்கு குடும்பத்தினர் மறுப்பு
செய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக வெளியான செய்திகளுக்கு குடும்பத்தினர் மறுப்பு

September 16, 2026
தென் கொரியாவிற்கு வேலைக்கு சென்று போதைப்பொருள் விற்ற இலங்கையர் கைது
செய்திகள்

தென் கொரியாவிற்கு வேலைக்கு சென்று போதைப்பொருள் விற்ற இலங்கையர் கைது

September 16, 2026
அரச பல்கலைக்கழக ஆசிரியர்கள் ‘கறுப்பு வாரம்’ அறிவிப்பு
செய்திகள்

அரச பல்கலைக்கழக ஆசிரியர்கள் ‘கறுப்பு வாரம்’ அறிவிப்பு

September 16, 2026
ஞானசார தேரர் நீதிமன்றில் சரணடைந்தார்
செய்திகள்

ஞானசார தேரர் நீதிமன்றில் சரணடைந்தார்

September 16, 2026
ஆசிரியர் வீட்டில் கைவரிசை; தங்கச்சங்கிலி பணம் என்பன திருட்டு
செய்திகள்

ஆசிரியர் வீட்டில் கைவரிசை; தங்கச்சங்கிலி பணம் என்பன திருட்டு

September 16, 2026
சவூதி அரேபியாவில் உள்ள இலங்கையர்களுக்கு தூதரகம் விடுத்துள்ள அவசர அறிவுறுத்தல்!
செய்திகள்

சவூதி அரேபியாவில் உள்ள இலங்கையர்களுக்கு தூதரகம் விடுத்துள்ள அவசர அறிவுறுத்தல்!

September 16, 2026
Next Post
விஜய்யின் மனைவி விவாகரத்து கோரி மனுதாக்கல்

விஜய்யின் மனைவி விவாகரத்து கோரி மனுதாக்கல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.